"கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி".. சூடா சுவையா.. என்னய்யா இது.. இப்படி கிளம்பிட்டீங்க!
சென்னை: கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என ஒருவர் கூவி கூவி விற்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரை வைத்தால் பொருட்களோ, வியாபாரமோ களைகட்டும் என்பது நம்பிக்கை. எடுத்துக்காட்டு நதியா கம்மல், நதியா கொண்டை, சந்திரமுகி புடவை, குஷ்பு இட்லி என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

வியாபாரம்
அந்த வகையில் நோய் பெயரில் இதுவரை எந்த பொருளும் பிரபலமடையவில்லை. ஆனால் இந்த கொரோனா நோய் வந்தாலும் வந்தது, கொரோனா தோசை, மாஸ்க் பரோட்டா என ஹோட்டல் ஊழியர்கள் சிறப்பாக வியாபாரம் செய்து வருகிறார்கள்.

கொரோனா விழிப்புணர்வு
இது கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது என ஹோட்டல் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என ஒருவர் கூவி கூவி விற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அண்டாவில் பிரியாணி
அந்த வீடியோவில் ஒருவர் ஒரு அண்டாவில் பிரியாணி வைத்திருக்கிறார். கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என்கிறார். அப்போது ஒருவர் வந்து எங்க கொரோனாவை காணவில்லை என ஏதோ லெக்பீஸ் காணவில்லை என்பது போல் கேட்கிறார்.

நெட்டிசன்கள்
அதற்கு அந்த கடைக்காரரோ கொரோனா எப்படி கண்ணுக்கு தெரியும் என கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த கடை எங்கே இருக்கிறது என தெரியவில்லை. கொரோனாவால் பலர் இறந்து கொண்டு வரும் நிலையில் வியாபார சுயலாபத்திற்காக இப்படி அதன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார் என நெட்டிசன்கள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications