Vijay: விஜய்யும் சங்கீதாவும் கடைசியாக எடுத்த போட்டோ இதுதான்! சோசியலில் வைரலாகும் புகைப்படம்
சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா உடனான கடைசி பொது போட்டோ 2020-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்டது. அந்த விழாவில் விஜய்யுடன் இணைந்து சங்கீதாவும் பங்கேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுவே இருவரும் பொதுவெளியில் கடைசியாக ஒன்றாகத் தோன்றிய தருணம் என்று தெரிவித்துள்ளது. அதன் பிறகு விஜய்யின் படங்கள் தொடர்பான எந்த நிகழ்விலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை.

2023-இல் வாரிசு பட இசை வெளியீட்டு விழா, அதே ஆண்டு லியோ படத்தின் வெற்றி விழா, 2024-இல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடக்க விழா, 2025-இல் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஆகிய முக்கிய நிகழ்வுகளில் விஜய் தனியாகவே தோன்றினார். சங்கீதா எந்த ஒரு விழாவிலும் இல்லை.
முரசொலி செல்வம் இறப்பு
இதேபோல், திமுக தலைவர் ஸ்டாலினின் அக்கா கணவர் முரசொலி செல்வம் இறந்தபோது சங்கீதா மட்டும் தனியாக அஞ்சலி செலுத்தச் சென்றார். இந்த நிகழ்வும் அவர்களது பிரிவை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
விஜய் - சங்கீதா தம்பதியர் 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் சங்கீதா பெரும்பாலும் பின்னணியில் இருந்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆரம்ப காலங்களில் சில பட விழாக்களில் இணைந்து தோன்றியிருந்தாலும், பொதுவெளியில் அவரது தோற்றங்கள் மிகக் குறைவு.
மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்
2020 மாஸ்டர் ஆடியோ விழாவுக்குப் பிறகு இருவரும் ஒன்றாகக் காணப்படவில்லை.
தற்போது சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு இருப்பதாகவும், இதனால் தீவிர மன உளைச்சல் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற உள்ளது.
இந்தக் கடைசி போட்டோ செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "27 ஆண்டுகால உறவு இப்படி முடிவுக்கு வருகிறதே" என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். விஜய் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.
யார் இந்த சங்கீதா
1990களின் பிற்பகுதியில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தபோது தொடங்கியது. ஒரு படப்பிடிப்பின்போது சந்தித்து, பின்னர் அவரது வீட்டுக்கு அழைக்கப்பட்டு, விஜய்யின் பெற்றோர் (எஸ்.ஏ. சந்திரசேகர் & ஷோபா) அவரை விரும்பி, திருமண ஏற்பாடு செய்தனர்.
3 ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் நடைபெற்றது. மகன் ஜேசன் சஞ்சய் (2000), மகள் திவ்யா சாஷா (2005). இருவரும் சில விஜய் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொதுவாக எந்த ஒரு சினிமா விழா, திருமண விழாக்கள், விருது வழங்கும் விழா, இசை வெளியீட்டு விழா என்றால் சங்கீதாவும் கலந்து கொள்வார். ஆனால் அண்மைக்காலமாக சங்கீதாவை விஜய்யுடன் பார்க்க முடியவில்லை.
கடைசியாக விஜய்யுடன் எடுத்த போட்டோ
இதனால் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை இருக்குமா என சந்தேகம் எழுந்தது. கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய்யுடன் சங்கீதா வந்திருந்தார். அத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக அவர் விஜய்யுடன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.
தனது குழந்தைகள் லண்டனில் படித்து வருவதால் அவர்களுக்கு துணையாக சங்கீதா சென்றிருப்பதாக சொல்லப்பட்டது. இத்தனைக்கும் தவெக எனும் கட்சியை விஜய் தொடங்கிய போது கூட சங்கீதா வரவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்திருந்தார் சங்கீதா. இதனால் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் விஜய் நடத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இநத நிலையில் தற்போது விவாகரத்து கேட்டு சங்கீதா கோர்ட் படியை மிதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications