வசமாக சிக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவின் ஸ்கெட்ச்! தவெகவுக்கு இப்படியா நடக்கனும்!
சென்னை: தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் களப்பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் செய்யும் வேலைகள் எல்லாம் சொதப்பலாக மாறியிருக்கிறது. குறிப்பாக விஜய்யின் பாணியும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் தவெக மீது விமர்சனங்களை அதிகப்படுத்தியிருக்கின்றன. விஜய்யின் போக்கு இப்படி மாறியிருக்க காரணம் ஆதவ்தான் என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
லாட்டரி பிசினசில் கொழுத்து, பெரும் பணக்காரர் ஆக வலம் வருபவர்தான் இந்த ஆதவ் அர்ஜுனா. இதைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி, அவருக்கு பெரிய அரசியல் அனுபவம் எல்லாம் கிடையாது.

விசிகவில் திருமாவளவனுக்கு செக்
கொஞ்ச காலம் திருமாவளவனுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் காலத்தை தள்ளியிருந்தார். இந்த கட்சியிலும் களப்போராட்டங்களில் எல்லாம் ஆதவ் முன் நின்றவர் கிடையாது. இப்படி இருக்கையில்தான் அந்த சம்பவம் நடந்தது. அதாவது விசிக கட்சிக்குள் இருந்துக்கொண்டு திருமாவளவன் முகம் சுளிக்கும்படியான வேலைகளை செய்தார். ஆதவ் அர்ஜுனாவின் மூவ் ஒவ்வொன்றும் திருமாவுக்கு நெருக்கடியை கொடுத்தது. இருப்பினும், கட்சி நடத்த பொருளாதார உதவி தேவை. எனவே இந்த விஷயத்தில் அதிரடி முடிவு எடுக்காமல் இருந்திருந்தார்.
கூட்டணிக்குள் இழுக்க முயற்சி
ஆனால், 2024 டிசம்பரில் பிரச்சனை கையை மீறியது. ஆதவ் எழுதிய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழா அப்போது நடந்தது. அதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றிருந்தார். தவெக+விசிக கூட்டணியை தொடக்கி வைக்கவே இந்த முயற்சி நடந்தது. ஆனால், ஆரம்பத்திலிருந்து ஆதவ் விஷயத்தில் உஷாராக இருந்த திருமாவளவன் இதில் பங்கேற்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். விசிக என்பது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓர் அங்கம் என்பதை திருமாவளவன் உறுதி செய்தார்.
திருமாவளவனின் உறுதி
இந்த சம்பவம் நடக்கும்போது, ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தார். திருமா உஷாரான நிலையில், தவெக-வுக்கு ஜம்ப் அடித்தார் ஆதவ்.. அங்கு போய் பேசிய பேச்செல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது, திருமாவளவனையே விமர்சித்தது, தற்போது ரஜினியை உள்ளே இழுத்துவிடும் அளவுக்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வந்திருக்கிறது.
ரஜினியை அட்டாக் செய்த ஆதவ்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், விஜய்யின் அரசியல் என்பது திமுகவை கடுமையாக எதிர்த்து எல்லாம் இருந்திருக்காது. அவர் தனது பலத்தை நிரூபிக்க நினைத்திருப்பார். ஆனால், விஜய்யின் பேச்சு டோன், முதலமைச்சருக்கு எதிராக மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறது. இதற்கு பின்னால் இருப்பது ஆதவ் அர்ஜுனாதான் என்று அரசியல் விமர்சகள் கூறுகின்றனர்.
விஜய்க்கு ஆதவின் தேவை
விஜய் காசு உள்ள பார்டி தான். ஆனால், அதை அரசியலில் கொட்டும் அளவுக்கு தயாரான ஆள் கிடையாது. மனைவி சங்கீதா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், தன்னை பொருளாதார ரீதியில் விஜய் ஒடுக்கினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். மனைவிக்கே கொடுக்காதவர் எப்படி அரசியலில் காசு போடுவார்? எனவே, அரசியலில் செலவு செய்ய ஆதவ் தேவை.
வசமாக சிக்கிய விஜய்
லாட்டரி குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களிடத்தில், லாட்டரியை விற்று பெற்ற பணத்தை அரசியலில் செலவு செய்ய ஆதவ் ரெடியாக இருக்கிறார். ஆனால், தன் விருப்பப்படி கட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன் வெளிப்பாடுதான் விஜய்யின் பேச்சு. சுருக்கமாக சொல்வதெனில் ஆதவ் விரித்த வலையில் சிக்கியவர்தான் விஜய். இன்று தவெக எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு காரணமே ஆதவ்தான் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications