Trisha: கேரக்டர் போச்சுன்னா எல்லாமே போச்சு! விஜய்யின் பழைய பேச்சு வைரல்! ஊருக்கு மட்டும் உபதேசம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய், கேரக்டர் குறித்து பேசிய பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி விஜய் பேசுகையில், கேரக்டர் பற்றி ஒரு அழகான வரிகள் உள்ளன. when wealth is lost, nothing is lost, when health is lost, something is lost, when character is lost, everything is lost.

vijay tvk A speech delivered by Vijay about the importance of character during the 2023 education awards ceremony organized by Vijay Makkal Iyakkam is now going viral again on social media drawing renewed attention from fans and the public

நீங்கள் பணத்தை இழந்துவிட்டால் எதையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் எதையோ ஒன்றை இழக்குறீர்கள் என்று அர்த்தம். ஆனால் குணத்தை இழந்துவிட்டால் நீங்கள் எல்லாத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் (அப்போது தவெக தொடங்கப்படவில்லை) சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு விஜய் தலைமையில் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில் என் நெஞ்சில் குடியிருக்கும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும் வணக்கம். ஆடியோ விழா, விருது விழா போன்ற பலவற்றில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுதான் முதல்முறை. ஏதோ பெரிய பொறுப்பு வந்ததாக உணர்கிறேன்.

வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்ற பழமொழி உள்ளது. உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது.

நான் வந்து உங்கள மாதிரி பெரிய பிரைட் ஸ்டூடண்ட்லாம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஏவ்ரேஜ் ஒரு ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட் மட்டும் தான். நான் வந்து நடிகர் ஆகலன்னா, அது ஆகியிருப்ப, இது ஆகியிருப்ப, ஒரு டாக்டர் ஆகியிருப்ப அப்டிலா சொல்லி உங்கள போர் அடிக்க விரும்பல. எனக்கு எனோட கனவுலா சினிமா, நடிப்பு தான். அதை மட்டும் தான் என்னோட பயணம் போயிட்டு இருந்தது. ஒருவேளை.... சரி அதவிடுங்க அதபத்தி இப்ப எதுக்கு.

இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மிக முக்கிய காரணம் அண்மையில் ஒரு படம் பார்த்தேன். அதில் ஒரு வசனம் நான் கேட்டேன், காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்த பிடிங்குக்குவாங்க, ஆனா படிப்ப மட்டும் உண்ட இருந்த எடுத்துக்குவா முடியாதுன்னு. அது என்ன ரொம்ப பாதிச்ச ஒரு லைன்னா இருந்துச்சு. நூற்றுக்கு நூறு உண்மை மட்டும் இல்ல, இதுதான் எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனிதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன்.

பள்ளியில் படித்த வேதியியல், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எல்லாம் நிக்கிவிட்டால், நமது குணம் மற்றும் சிந்திக்கும் திறன் மட்டுமே எஞ்சி இருக்கும். படிக்கணும், மார்க்ஸ், கிரேட்ஸ் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அதையும் தாண்டி உங்களது குணம் மற்றும் சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான், கல்வி முழுமையாகிறது.

பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து வெளியேறி புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்கப்போகிறீர்கள். அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும். அதைமட்டும் சுய ஒழுக்கத்துடன் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒழுக்கம்னு சொல்லி யாரும் லைஃப என்ஜாய் பண்ணக்கூடாதுன்னு நான் சொல்லல. இவ்வாறு விஜய் பேசியிருந்தார். தற்போது விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் விஜய்யும் திரிஷாவும் இணைந்து சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு வருகை தந்தது அவரது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரக்டர் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த விஜய். தற்போது மாணவர்களுக்கு சொல்ல வரும் விஷயம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+