விஜய் - சங்கீதா விவாகரத்து.. யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம்.. சிடிஆர் நிர்மல்குமார் வேண்டுகோள்!
சென்னை: தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அண்மையில் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 1999ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இடையில் திருமணம் நடைபெற்றது. விஜய்யின் ரசிகையாக இருந்து அவரை காதலித்து சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர விஜய் மனைவி சங்கீதா முடிவு எடுத்துள்ளார். விவாகரத்து தொடர்பான மனுவில் விஜய் மீது சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் சங்கீதா, நடிகை உடன் கள்ளத்தொடர்பில் விஜய் இருந்தது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது.
நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் விஜய் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். இதையடுத்து நடிகை உடனான கள்ளத்தொடர்பை முறித்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னதை போல் விஜய் நடக்காமல், கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு, விஜய்யால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.
இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் கள்ளத்தொடரை விஜய் தொடர்ந்தார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதனால் குழந்தைகளும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், எனக்கான உரிமைகளை கணவர் விஜய் நிறுத்திவிட்டார். சுதந்திரமாக நடமாடவிடாமல் தடுத்தார். பொருளாதார ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக தவெக தரப்பிலோ, நடிகை தரப்பிலோ அல்லது விஜய் தரப்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக தலைவர் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications