குண்டை போட்ட சங்கீதா.. பனையூரில் முடங்கிய விஜய்.. அரசியல் மீட்டிங் எல்லாம் ரத்து.. கேம் ஓவர்?
சென்னை: தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கைதான். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருக்கும் செய்தி, காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தச் சூழலில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சாவூரில் திட்டமிடப்பட்டிருந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடக்குமா? விஜய் அதில் பங்கேற்பாரா? என்கிற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
கோர்ட் நோட்டீஸ்... கலக்கத்தில் கேடர்!
சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் சங்கீதா தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வரும் ஏப்ரல் 20-ம் தேதி விஜய்யை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக தன் பெர்சனல் விஷயங்களில் 'சைலன்ட்' மோடில் இருக்கும் விஜய், இந்த முறை பொதுவெளியில் விழுந்திருக்கும் இந்த விவகாரத்தால் சற்று அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

தஞ்சை மீட்டிங்: தள்ளிப் போகிறதா?
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், மார்ச் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. இதற்காக தஞ்சை மாவட்ட காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் ஏற்கனவே அனுமதி கோரியுள்ளனர். சுமார் 5,000 நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்காக க்யூ-ஆர் கோடு (QR Code) கொண்ட அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி வரை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஆனால், தற்போதைய சூழலில்:
மீடியா வெளிச்சம்: விஜய் பொதுவெளியில் தோன்றினால், அரசியல் கொள்கைகளை விட விவாகரத்து விவகாரமே ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்படும் என கட்சித் தலைமை அஞ்சுகிறது. முக்கியமாக அங்கே உள்ள பெண்களை சந்திக்க முடியாது. கடந்த மீட்டிங் போல பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச முடியாது.
நிர்வாகிகள் மனநிலை: உற்சாகமாகத் தேர்தல் வேலைகளைப் பார்க்க வேண்டிய நேரத்தில், தலைவரின் குடும்பப் பிரச்சனை தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டம் கேன்சல்: "தற்போதைக்கு எந்தப் பொது நிகழ்ச்சியும் வேண்டாம்; சில காலம் அமைதி காப்போம்" என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் அட்வைஸ் செய்துள்ளதாகத் தகவல். இதனால் தஞ்சை மீட்டிங் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ வாய்ப்புகள் அதிகம்.
அரசியலில் இது சறுக்கலா?
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு களம் இறங்கியுள்ள விஜய்க்கு, இது ஒரு முக்கியமான காலகட்டம். ஏற்கெனவே 'ஜனநாயகன்' பட ரிலீஸ் சிக்கலில் இருக்க, இப்போது குடும்ப விவகாரமும் சேர்ந்துள்ளது. "அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்கள் சகஜம், அதைத் தாண்டி வர வேண்டும்" என ஒரு தரப்பு சொன்னாலும், "பெண்கள் மற்றும் குடும்ப வாக்குகளை இது பாதிக்குமா?" என்கிற கணக்கீடுகளும் அறிவாலயத்திலும், எடப்பாடி தரப்பிலும் ரகசியமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
விஜய் இந்தச் சிக்கல்களைக் கடந்து தஞ்சை மண்ணில் கர்ஜிப்பாரா அல்லது 'வெயிட் அண்ட் வாட்ச்' பாலிசியைக் கடைபிடிப்பாரா என்பதை இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும்!
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications