தூக்கத்தை தொலைத்த விஜய்? திமுக, அதிமுகவை விடவும் தவெகவை அச்சுறுத்துவது அந்த 4 பேர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்தவர்களை கூண்டில் அடைப்பதற்கு பதிலாக, சால்வை அணிவித்து கட்சியில் சேர்ப்பது விஜய்யின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சொந்தக் கட்சிக்காரர்களை வளர்க்காமல், இவர்களிடம் சென்று ஏன் விஜய் நிற்க வேண்டும்? எந்த மாதிரியான அரசியல் தலைவர் விஜய்?" என்றெல்லாம் காட்டமாக கேட்டிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோட்டீஸ்வரன், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ள முடிவு, விஜய்யின் அரசியல் திட்டங்களுக்குப் பலத்த அடியாக விழுந்துள்ளது. "திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து தன்னுடைய அரசியல் நகர்வுகளை கலைக்கப் பார்க்கின்றன" என்று பேசி, மக்களிடம் அனுதாபம் தேட தவெக தரப்பில் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருந்தது. தேர்தல் தள்ளிப்போனதால், அவர்களின் இந்தத் தேர்தல் வியூகம் இப்போது முற்றிலும் முடங்கியுள்ளது.

Vijay faces internal criticism over TVK political alliances

118 மெஜாரிட்டி நம்பர்

ஆட்சிக்குத் தேவையான மெஜாரிட்டி நம்பரான 118 என்பதை விஜய் மேடைகளில் அடிக்கடி மனப்பாடம் செய்து பேசி வருகிறார். இப்போதைக்கு தவெக ஆட்சியை தொடுவதற்கு யாருமே முயற்சிக்கவில்லை.. அதுக்குள்ளேயே விஜய் ஏன் பயப்படுகிறார்.. ஊர் ஊராக சென்று, "நம்பிக்கையுடன் இருங்கள்" என்று ஏன் சொல்ல வேண்டும்?

ஸ்டாலின் சாரை பார்த்தால் ஆட்சியை கலைப்பது போல தெரியுதா? அவரே உடம்பு சரியில்லாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒருவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு, எப்பொழுது திரும்பி வரலாம், வரக்கூடாதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து சுற்றிக் கொண்டிருக்கிறார். இது திமுகவின் பிரச்சனை.

தூக்கத்தை தொலைத்த விஜய்

அதேபோல அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் முழுமையாக இல்லை.. பாதி சின்னம்தான் அவரிடம் உள்ளது, மீதி எங்கே போனது என்றே தெரியவில்லை. கட்சியே பலவீனமாக உள்ளது; ஐடி விங் சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரியாகச் செய்யவில்லை, இதைச் சரியாகச் செய்யவில்லை என்று குறை கூறிக்கொண்டிருக்கும் போதே, அந்த அணியிலிருந்து 2 உறுப்பினர்கள் வெளியேறிவிட்டனர். அந்த கட்சியின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது.

தவெக ஆட்சியை கலைப்பது யார்?

நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானைப் பார்த்தால் ஆட்சி கலைப்பது போலவா இருக்கு? அல்லது வைகோ ஆட்சியைத் கலைக்க வாய்ப்பிருக்கிறதா? அல்லது ஆளுநர் அருளேக்கார் கலைத்துவிட்டு அவருக்கு என்ன கிடைக்கப் போகிறது? ஒருவேளை பாஜகவிடம் 70 இடங்கள் இருந்தால், அவர்கள் ஏதாவது அரசியல் செய்து பார்க்கலாம். இங்கு யார் ஆட்சியைத் கலைக்கப் போகிறார்கள் என்று சொல்லங்கள்.. எதிர்க்கட்சிகள் எல்லாருமே தங்களுக்குள் இருக்கும்போது, தவெக தேவையின்றி பயப்படுகிறது..

4 பேருக்கு ஏன் முக்கியத்துவம்?

"லஞ்சத்தை ஒழிப்பேன், இனி என்னுடைய ஆட்சி விஸ்வரூபமாக இருக்கும்" என்கிறார் விஜய்.. ஆனால், மணல் கொள்ளை மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய கரூர் விஜயபாஸ்கர், குட்கா வழக்கில் தொடர்புடைய விராலிமலை விஜயபாஸ்கர், நீதிமன்ற தண்டனை பெற்ற செங்கோட்டையன், கருப்புப் பண விமர்சனத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனா போன்றோரையெல்லாம் தன் பக்கத்தில் வைத்துள்ளார்.

இவர்களை எல்லாம் வைத்து கொண்டு, எப்படி ஊழல் ஒழிப்பு பற்றி பேச முடிகிறது? ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த இவர்களை கூண்டில் அடைப்பதற்கு பதிலாக, சால்வை அணிவித்து கட்சியில் சேர்ப்பது விஜய்யின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சொந்தக் கட்சிக்காரர்களை வளர்க்காமல், இவர்களிடம் சென்று ஏன் விஜய் நிற்க வேண்டும்? எந்த மாதிரியான அரசியல் தலைவர் விஜய்?" என்றெல்லாம் காட்டமாக கேட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+