ஜூலை.. ஆகஸ்ட்.. செப்டம்பர்! 3 மாதமாக சரியும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல்.. இந்த முறை ரூ.482 கோடி சரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 3வது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1 சதவீதம் அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் சரிவு மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் நுகர்வு சக்தி குறைந்ததே இதற்கு காரணம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். தேசிய அளவில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 14.7 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் வசூல் குறைந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வாரியாக ஜிஎஸ்டி கலெக்ஷன் குறித்த டேட்டாவை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி கலெக்ஷன் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அது சரிந்து வருகிறது.

Tamil Nadu GST Collection

சரிவு

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ரூ.10,670 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.10,188 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதன் மூலம் ஓராண்டு ஒப்பீட்டில் ஜிஎஸ்டி வருவாய் சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூலில் கடந்த சில மாதங்களாகவே சரிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரி வசூல் தலா 1 சதவீதம் குறைந்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலும் வசூல் குறைந்துள்ளது. ஆனால், இந்த முறை சரிவு 5 சதவீதமாக இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏன் முக்கியம்

ஒரு மாநிலத்தின் ஜிஎஸ்டி வசூல் என்பது அங்கு நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்புடைய முக்கியமான வருவாய் அளவீடாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தொடர்ந்து 3 மாதங்களாக வசூல் சரிவை சந்தித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.482 கோடி குறைந்துள்ளது.

தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூலில் இந்த ஆண்டு மே மாதம் முதலே படிப்படியாக சரிந்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் சரிந்துள்ளது.

காரணம்

நுகர்வு வீழ்ச்சி தான் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்! மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதுடன், செலவழிக்க கையிருப்பில் இருக்கும் தொகையும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் தங்களது செலவினங்களை குறைத்திருக்கலாம் என்றும், அதன் தாக்கம் நேரடியாக ஜிஎஸ்டி வசூலில் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் அதனுடன் தொடர்புடைய வரி வசூலும் குறைந்துள்ளது.

இதர மாநிலங்கள்

நமது அண்டை மாநிலங்களை பொறுத்தவரை கேரளம் மாநிலத்தின் ஜிஎஸ்டி வசூல் ரூ.3010 கோடியில் இருந்து ரூ.3238 கோடியாக, அதாவது 11% உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் ஜிஎஸ்டி வசூல் ரூ.12,001 கோடியில் இருந்து ரூ.13,884 கோடியாக 16% உயர்ந்துள்ளது. ஆந்திரா ஜிஎஸ்டி வசூல் 6% வரை உயர்ந்துள்ள நிலையில், தெலுங்கானா ஜிஎஸ்டி 18% வரை உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா லடாக், வடகிழக்கு மாநிலங்களிலும் கூட ஜிஎஸ்டி வசூல் 15%க்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+