பிரசாரத்தில் கொட்டி தீர்த்த விஜய்.. மனைவி சங்கீதா விவாகரத்து கோரியது பற்றி முதல் முறையாக பேச்சு
நெல்லை: நெல்லையில் பேசிய விஜய், மனைவி சங்கீதா தன்னிடம் இருந்து விவாகரத்து கோரியது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இது பற்றி மவுனம் கலைத்துள்ளார். ஆனால் தனது மனைவி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமவே, விவகாரத்து விவகாரம் குறித்து விஜய் பேசியுள்ளார்.
நெல்லையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் பேசியதாவது:- கரூர் சம்பவத்தை பற்றி ஊருக்கே தெரியும். ஆனால் போடு விஜய் மீது பழிய போடு.. என்னடா இவ்ளோ பெரிய ஒரு பழியை தூக்கி விஜய் மேல போட்டாலும் மக்கள் விஜய் கூடவே நிற்கிறாங்க.. இது என்ன அதிசயமாக இருக்குது.. அப்டின்னு அதை டிரை பண்ணி பார்த்தாங்க.. அது மக்கள் கிட்ட எடுபடல..

தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னாடி
அடுத்து ஜனநாயகன முடக்கு.. படத்தை முடக்கினால் பையன் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிருவான்னு நினைச்சாங்க.. அது யாரு முடக்குனாங்கன்னு உங்களுக்கு தெரியும். நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படத்தை முடக்குனாலும் அவனும் அதை கண்டுக்காம அவன் வேலையை பார்த்துட்டு போயிட்டு இருக்கான்.. அடுத்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சி.. போடு எஸ்.ஓ.பின்னு ஒன்னு போடு..
விஜய்க்கு மட்டும் தனியா ரூல்ஸ். கண்டிஷன்ஸ்.. மற்ற கட்சிகளை எல்லாம் விடு.. விஜய்க்கு மட்டும் தனி கண்டிஷன்ஸ் போடு.. அவன் வெளியவே வரக்கூடாது. மக்களை சந்திக்கவே கூடாது. என்ன ஆச்சு.. அதுவும் எடுபடல.. அடுத்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சி.. நம்ம சுற்றி இருக்கவங்கள வச்சி.. அதாவது இத்தனை வருஷமா வெயிட் பண்ணி தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னாடி கரெக்டா ஒரு அவதூறு பரப்ப வேண்டியது..
பிரிக்கவே முடியாது
அது என்னன்னு உங்களுக்கே தெரியும். அதுவும் மக்கள் கிட்ட எடுபடல.. இதை மாதிரி எத்தனை சோதனைகள், வேதனைகள் நீங்கள் கொடுத்தாலும், இந்த திமுகவாலயோ.. பாஜகவாலயோ.. மற்றும் பலர்னாலயோ.. எந்த... வேற யாராலும் என்னை உங்க கிட்ட இருந்ந்து பிரிக்கவே முடியாது" என்று பேசினார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை சங்கீதா தாக்கல் செய்து இருந்தார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும், இந்த விவகாரம் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது.
முதல்முறையாக வாய் திறந்தார்
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரியிருந்தார். சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கு வரும் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அன்றைய தினம் விஜய் - சங்கீதா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவி சங்கீதா தன்னிடம் இருந்து விவாகரத்து கோரியது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த விஜய், முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இது பற்றி மவுனம் கலைத்துள்ளார். அதிலும் வெளிப்படையாக தனது மனைவி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாகவே, விவகாரத்து விவகாரம் குறித்து விஜய் நெல்லை பிரசாரத்தில் பேசியுள்ளார். தனிப்பட்ட பிரச்சினையை அரசியல் மேடையில் பேசி அவதூறு பரப்ப சதி என்று எதிர்க்கட்சிகளின் மீது பழி போடுவது போல விஜய்யின் பேச்சு இருப்பதாகவும் இது எந்த வகையில் நியாயம் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்புவதை பார்க்க முடிகிறது.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications