பக்குவமான தலைமை.. பக்காவாய் காய் நகர்த்தும் ’தவெக’ தலைவர் விஜய்! பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் வர வேண்டாம் என விஜய்யே கூறி இருக்கும் நிலையில், இதுவரை எந்த கட்சியினரும் செய்யாதது என பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வரக்கூடாது, மீறி மது அருந்தி விட்டு வந்தால் மாநாட்டு திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்படும், மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும், மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருபவரோடு பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும், போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நேற்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய் சில முக்கிய கருத்துகளை கூறி இருந்தார். குறிப்பாக,"கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.
மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம். அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
கூட்டம் கூட்டுவதற்காக எதற்கும் தயாராக இருக்கும் அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருக்கும்நிலையில், கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு கூட்டம் கூடுவது தொடர்பாக கவலைப்படாமல் இந்த மாநாட்டிற்கு தொலைதூரங்களில் இருந்து கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் விருப்பப்பட்டே வந்தாலும் கூட அந்தப் பயணம் அவர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து வீட்டில் இருந்தே ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மாநாட்டு நிகழ்ச்சியை கண்டு வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மிகுந்த அக்கறையோடும், முதிர்ச்சியான அரசியல் கட்சி தலைவர் போல விஜய் கேட்டுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications