கடைசியில விஜய்க்கு இருந்த ஒரு வாய்ப்பும் போச்சா.. அடித்து ஆடிய ஸ்டாலின்! ஓடி வந்த காங்கிரஸ்!
சென்னை: கூட்டணியில் பங்கு என்று விஜய் சொன்னதும், காங்கிரஸ் தலைவர்களும் இதே விஷயத்தை முன்னிறுத்தி பேசி வந்தனர். இதனால் காங்கிரஸ், விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றுவிடும் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தற்போது திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்திருக்கிறது. இதனால் விஜய்க்கு இருந்த ஒரு வாய்ப்பும் கையை விட்டு போய் இருக்கிறது.
"நாம போட்ட குண்டு இப்போதான் வெடிக்க தொடங்கியிருக்கிறது" என்று விஜய் சமீபத்தில் பேசியிருந்தார். அதாவது, தன்னுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் பேசியிருந்தார்.

கதர் தலைகள் ஓவர் பேச்சு
இந்த டோனை கையில் எடுத்த கதர் தலைவர்கள், ஆமாம் ஆமாம் எங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேச தொடங்கினர். தமிழகத்திற்கு இதெல்லாம் செட் ஆகாது என்று திமுக, ஆரம்பத்திலிருந்து சொன்னது. ஆனால், கதர் தலைகள் கேட்கவில்லை. ஆட்சி அதிகாரம் குறித்து ஓவராக பேச தொடங்கினர். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக இந்த டிமாண்டுக்கு நோ சொல்லிவிட்டார்.
ஒப்பந்தம் கையெழுத்து
இப்படி இருக்கையில் திமுகவுடன், காங்கிரஸ் கை கோர்க்குமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இதனையடுத்து தற்போது திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்திருக்கிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்கிற முறையில், செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
ஏமாந்த விஜய்
இதனால் விஜய் அரசியல் களத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என விஜய் அவர்கள் கூறிய நிலையிலும் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை. தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று விஜய் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
அப்செட் மோடில் விஜய்
காங்கிரஸைதான் விஜய் கடைசியாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், காங்கிரஸ் திமுகவுடன் இணைந்திருப்பதால், விஜய் கடும் அப்செட் மோடுக்கு சென்றிருக்கிறார்.
நாம போட்ட குண்டு வேலை செய்யுது என்றெல்லாம் பேசிய விஜய், தற்போது அவரே பெரிய குண்டில் சிக்கியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications