பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும். அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாமல் மக்களால் எப்படி இருக்க முடியும். தமிழ்நாட்டின் மோசமான நிலைமைக்கு தீய சக்தி திமுக தான் காரணம். விரைவில் விடைபெறபோகும் ஸ்டாலின் சார் தான் காரணம்" என்று பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இன்று காலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Vijay Slams DMK in Kolathur Raises Concerns Over Women s Safety in Tamil Nadu

வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்தை தொடங்கினர். முதன் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள விஜய் பெரம்பூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவை விமர்சித்து பேசினார். இதனை தொடர்ந்து அங்கிருந்து விஜய் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக புறப்பட்டார்.

அப்போது வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே சமயம் எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்தே வந்தனர். கொளத்தூர் வந்ததும் பேசிய விஜய் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும். அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாமல் மக்களால் எப்படி இருக்க முடியும். தமிழ்நாட்டின் மோசமான நிலைமைக்கு தீய சக்தி திமுக தான் காரணம். விரைவில் விடைபெறபோகும் ஸ்டாலின் சார் தான் காரணம்.. திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்களே விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+