Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெகவில் இருந்து லட்சிய ஜனநாயக கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி! அட.. நெஞ்சுல விஜய் டாட்டூ போட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தீவிர ஆதரவாளரும், நடிகருமான தாடி பாலாஜி, தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். அண்மையில் புதிதாக கட்சி தொடங்கிய தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் தாடி பாலாஜி.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் 'லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஜோஸ் சார்லஸ், மிஸ்டு கால் மூலம் பாஜவில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பாக பாஜவில் இருந்து விலகி, ஜோஸ் சார்லஸ் மக்கள் இயக்கம் என்று ஒரு அமைப்பை தொடங்கி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

Vijay Supporter Actor Thadi Balaji Quits TVK Joins Latchiya Jananayaka Katchi

லட்சிய ஜனநாயக கட்சி

மேலும், தன்னை வலுப்படுத்த மாற்று கட்சியில் உள்ள இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை கட்சியில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டார். இதில் ஒரு பாஜக அமைச்சர் மற்றும் சில எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தந்தனர். மேலும், பலர் ஜோஸ் சார்லஸ் பக்கம் சாய பச்சை சிக்னல் தந்தனர். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி லட்சிய ஜனநாயக கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியை மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கினார்.

ஜோஸ் சார்லஸ் தலைமையில் தேங்காய் திட்டு துறைமுகத்தில் இருந்து படகுகளில் சென்ற அக்கட்சியினர், மும்மதத்தை சேர்ந்த குருமார்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்திய பின்னர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதில், நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில், கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் எல்ஜேகே என பதியப்பட்டுள்ளது.

மார்ட்டின் மகன்

புதிய கட்சி தொடங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “தவெக தலைவர் விஜய் உடன் இருப்பவர்கள் சரி இல்லை. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார், புதுச்சேரியை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும் விஜய்யுடன் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டும். அவரை வழிநடத்துபவர்கள் சரியில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.” எனத் தெரிவித்திருந்தார்.

தாடி பாலாஜி

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி, இன்று லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். புதுச்சேரியில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் தாடி பாலாஜி.

1997ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ், சுஹாசினி நடிப்பில் வெளியான நந்தினி படத்தில் டிரைவராக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தாடி பாலாஜி. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். வடிவேலு, விவேக் ஆகியோருடன் சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளார்.

தவெகவில் இருந்து தாவிய தாடி பாலாஜி

திமுக ஆதரவாளராக இருந்து வந்த நடிகர் தாடி பாலாஜி, விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதும், அதில் சேர ஆர்வம் காட்டி வந்தார். விக்கிரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார். தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொண்டார். உச்சமாக, விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டார். ஆனால், கட்சியில் பலருக்கும் முக்கிய பதவிகளை கொடுத்த விஜய், தாடி பாலாஜியை கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை விமர்சித்து வந்தார் தாடி பாலாஜி. கரூர் சம்பவம் தொடர்பாகவும் தவெக நிர்வாகிகளை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று லட்சிய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் தாடி பாலாஜி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+