விஜய் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்! எம்ஜிஆரை விட ஒருபடி மேல தான்! எப்படி தெரியுமா? டேட்டாவ பாருங்க!
சென்னை: தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். மீண்டும் ஒரு நடிகர் நாடாள வந்திருக்கிறார். முதன்முறையாக எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய நிலையில் தற்போது விஜய் அந்த அரிய சாதனையை படைத்திருக்கிறார். தரவுகளின் படி சொல்லப்போனால் எம்ஜிஆரை விட ஒரு படி மேலே விஜய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமையத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், தனது முதல் தேர்தலிலேயே மிகப் பெரிய சாதனை புரியும் அளவுக்கு முன்னேறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

மாலை 6.30 மணி நிலவரப்படி, தவெக சுமார் 34.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில், 1977 ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் களம் கண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) தலைமையிலான அதிமுக பெற்ற 33.52 சதவீத வாக்குகள் தான் இதுவரை ஒரு புதிய கட்சி பெற்ற அதிகபட்ச சாதனையாகக் கருதப்பட்டு வந்தது.
அந்த சாதனையை இப்போது விஜய் முறியடித்துள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவைப்படும்.
இந்த நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது முதல் தேர்தலிலேயே ஒரு கட்சிக்கு கிடைக்கும் அபூர்வ வாய்ப்பு பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு கோடியே 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதும் இந்த வெற்றியின் பரவலான தாக்கத்தை காட்டுகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக, இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆட்சிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்றாவது இடத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. பல இடங்களில் பின்னடைவை சந்தித்தாலும், அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை, விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது அரசியல் வருகையை வலுவாக பதிவு செய்துள்ளார். இது அவரது தனிப்பட்ட செல்வாக்கையும், மக்கள் மத்தியில் உருவான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இன்னும் எல்லோருக்கு இயல்பாகவே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், தவெக தனிப்பெரும்பான்மையை எட்டுமா என்பது தான்.
சில இடங்கள் குறைவாக இருந்தால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியும் நடைபெற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில், இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்துக்கு பிறகு, முதல் முறையாக ஒரு புதிய அரசியல் கட்சி இவ்வளவு வலுவாக வாக்கு சதவீதத்தை வாங்கி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களில் வெளிவரும் முழுமையான முடிவுகள், தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications