உஷாரான பாஜக அதிமுக.. திமுகவின் சக்கர வியூகத்தில் விழுந்த விஜய்.. இனி என்ன செய்ய வேண்டும்
சென்னை: கரூர் விவகாரத்தில் விஜய் நடவடிக்கை சரியானது அல்ல என்று ஸ்டாலினை சண்டைக்கு இழுத்தது அரசியல் முதிர்ச்சியின்மையை அப்பட்டமாக காட்டியது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில் திமுக போன்ற 50 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ஒரு கட்சியை எதிர்க்கும்போது, அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்க வேண்டும். விஜய் நேரடியாக ஸ்டாலினைத் தாக்கும்போது, திமுகவினர் அதை "விஜய் விளம்பரத்திற்காகத் தேடுகிறார்" என்று மடைமாற்றம் செய்ய எளிதாகிவிட்டது. இது விஜய்யின் பிம்பத்தை ஒரு முதிர்ந்த தலைவராகக் காட்டாமல், ஒரு "தொடக்கம் தெரியாத போராட்டக்காரராக" காட்டியது. அப்போது தான் பாஜக அதிமுக உஷாரானது.
பொதுவாஒரு பிரச்சனையை எடுத்தால், அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டுதான் அரசியல் தலைவர்கள்பேசுவார்கள். விஜய்யின் அறிக்கைகளிலும், பேச்சுகளிலும் ஒரு "எமோஷனல்" தன்மை இருக்கிறதே தவிர, ஒரு "பாலிடிக்கல் லாஜிக்" குறைவாக இருப்பதாகத் தெரிகிறது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஏனெனில் விஜய் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அமைச்சர்களையோ அல்லது உள்ளூர் அதிகாரிகளையோ நோக்கி கரூர் விவகாரத்தில் கேள்வி எழுப்பி இருக்கலாம். இயல்பானது. ஆனால், ஆரம்பத்திலேயே நேரடியாக முதலமைச்சரை "சண்டைக்கு இழுப்பது" போன்ற தொனி, அவர் இன்னும் "சினிமா ஹீரோ" மனநிலையிலேயே இருக்கிறார் என்பதைக் காட்டுவதாக விமர்சகர்கள் அப்போது விமர்சித்திருந்தார்கள்.
கரூர் விவகாரம் ஒருபுறம் எனில், திமுக விமர்சிக்கும் அதேநேரம் பாஜகவை நேரடியாக விமர்சிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது. அதேபோல் கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் வாக்குறுதியை அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை..
முதல் முறை களம் காண்பதால், பாஜக அதிமுக கூட்டணியில் சேராமல், திமுகவையும் கடுமையாக எதிர்த்த விஜய், வலுவான கூட்டணி அமைப்பதில் கோட்டைவிட்டதாக பலரும் கருதுகிறார்கள். திமுக பல தலைவர்கள் தங்கள் பக்கம் இழுக்கிறது. அதுபோல தவெக அனுபவம் வாய்ந்தவர்கள் இழுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் தனக்கு மிகப்பெரிய சினிமா திரைபலம் இருப்பதாக விஜய் நம்புகிறார். ஜெயலலிதா போல் கையை அசைத்து, திமுகவை விமர்சித்தால் ஜெயிக்கலாம் என நினைத்தால் அது தவறு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதுபற்றி விமர்சகர்கள் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு ஒரு நீண்டகால அரசியல் வரலாறு உள்ளது. "அம்மா" என்கிற ஆளுமையாக உடனே உருமாறவில்லை.. பல வருடம் கழித்தே அப்படி மாறினார். அதன்பின்னரே அவர் ஹெலிகாப்டரில் வந்து சென்றாலும் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால் விஜய் இன்னும் தன்னை ஒரு "மக்களுக்கான தலைவனாக" நிரூபிக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் 'நமக்கு நாமே' பயணம் செய்ததும், அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பயணம் செய்ததும் மக்களைச் சென்றடைய உதவியது. எனவேவிஜய் ஏர்கண்டிஷன் கேரவன்களில் தங்காமல், சாதாரண கிராமத்து வீடுகளில் தங்குவதும், மக்களோடு அமர்ந்து உண்பதும் மட்டுமே அந்த "சினிமா நடிகர்" என்ற திரையை விலக்கி "நம்ம வீட்டுப் பிள்ளை" என்ற பிம்பத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
புள்ளி விவரங்களுடன் கூடிய "தரமான" அரசியல்
மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது ரசிகர்களுக்குப் பிடிக்கும், ஆனால் நடுநிலை வாக்காளர்களைக் கவராது. செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்ப்பது விஜய்க்குப் பலவீனமாகவே முடியும். புள்ளி விவரங்களோடு அரசைச் சாடும்போதுதான் அவர் ஒரு "ஆளுமைமிக்க தலைவராக" அங்கீகரிக்கப்படுவார். "இந்தத் திட்டத்தில் இவ்வளவு ஊழல் நடந்துள்ளது", "இந்தத் துறையில் இவ்வளவு பின்னடைவு உள்ளது" எனப் புள்ளி விவரங்களுடன் மீடியாக்களை அவர் எதிர்கொள்ள வேண்டும்.
வலுவான "எதிர்ப்பு" அரசியல்
தற்போது விஜய் ஒரு 'மென்மையான' =அரசியலை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் ஆளுங்கட்சியின் தவறுகளை மிகக் கடுமையாக, சமரசமின்றி எதிர்க்க வேண்டும். 'அலட்சியம் காட்டினால்' மக்கள் அவரை ஒரு மாற்றுச் சக்தியாகக் கருத மாட்டார்கள்.
அனுபவம் வாய்ந்த டீம்
விஜயகாந்திடம் இருந்த அந்த 'அரசியல் முதிர்ச்சி' அவர் பின்னால் இருந்த மூத்த தலைவர்களால் வந்தது. விஜய்க்கு இப்போது தேவையானது: ஒரு சிறந்த பொருளாதார ஆலோசகர். ஒரு சிறந்த சட்ட ஆலோசகர். கள நிலவரங்களைச் சொல்லும் அரசியல் வியூகவாதி. விஜய் இன்னும் "நட்சத்திர அந்தஸ்து" (Stardom) என்கிற கூட்டுக்குள்ளேயே இருக்கிறார். விஜய் தெருக்கோடி வரை சென்று மக்களைச் சந்தித்து, அனல் பறக்கும் அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே எதிர்க்கட்சி இடத்தைப் பற்றியாவது கனவு காண முடியும். இல்லையெனில், 2026-ல் அவர் வெறும் 'வாக்குகளைப் பிரிப்பவராக' மட்டுமே முடிந்துவிடுவார் என்கிறார்கள் அவரை எதிர்க்கும் விமர்சகர்கள்.
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications