என்ன நிவாரணமாக இருந்தால் என்ன.. அந்த குட்டி பையனின் சந்தோஷத்தை பாருங்கள்!
செந்தில் - ராஜலட்சுமி புயல் பாதித்த மக்களுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள்.
Recommended Video

சென்னை: சூப்பர் சிங்கர் பாடகர்கள் செந்திலும் - ராஜலட்சுமியும் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள்.
அவர்கள் கொடுத்த நிவாரணத்தைப் பெற்ற ஒரு குட்டிப் பையன் துள்ளிக் குதித்த காட்சி கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது.
புயல் பாதித்த மக்களுக்கு பொதுமக்கள் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினை வைத்து, நிதி, நிவாரண பொருட்களை திரட்டி டெல்டா மக்களுக்கு நேரில் போய் பார்த்து கொடுத்து விட்டு வருகிறார்கள்.

மெழுகுவர்த்திகள்
பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி தேவை உணவும், குடிநீரும், மருந்து மாத்திரைகள், போர்வைகள், மெழுகுவர்த்திகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்தான்.

நிவாரண பொருட்கள்
இப்படித்தான் சூப்பர் சிங்கர் பாடகர்கள் செந்திலும் - ராஜலட்சுமியும் உதவி செய்ய கிளம்பி உள்ளனர். ஒரு கிராமத்துக்கு சென்ற இவர்கள் கைகளில் பெரிய பையை கொண்டு போய் உள்ளனர். கிராம மக்களும் நிவாரண பொருட்கள் வந்திருக்கிறது என்று அவர்களிடம் வாங்க வந்தனர்.

டைகர் பிஸ்கட்
செந்தில் - ராஜலட்சுமி தம்பதி கொண்டு வந்தது டைகர் பிஸ்கட். வீடு வீடாக சென்று அதைக் கொடுத்து ஆறுதல் கூறினர். அந்த பிஸ்கட்டை வாங்கிய ஒரு சிறுவன் 'ஹைய்யா ஹைய்யா' என்று துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டது நெகிழ வைக்கிறது.
வீடியோ காட்சி
இந்த பிஸ்கட் கூட கிடைக்காத நிலையில்தான் பல ஊர்கள் உள்ளன என்பதைத்தான் இந்தக் காட்சி உணர்த்துகிறது. இன்னும் நிறைய உதவிகள் கிராமங்களுக்குப் போய்ச் சேர வேண்டியதுள்ளது என்பதை இந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications