"வாரிசு.." கிளம்பிய புது சர்ச்சை! ஆடியோ லான்ச் முடிந்ததும் இப்படியா.! தயாரிப்பாளருக்கு அபராதம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் பேச்சு இணையத்தில் டிரெண்டாகியுள்ள நிலையில், வாரிசு தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடித்த கடைசி படம் பீஸ்ட் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை. இதனால் விஜயின் அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு
தொடக்கத்தில் இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்ற போதிலும், பட புரோமோஷன்களை ஆரம்பித்ததும் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் பாடியே ரஞ்சிதமே பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. அடுத்து சிம்பி பாடிய தீ தளபதி படலும் எதிர்பார்ப்பைப் பல மடங்கு அதிகரித்துவிட்டது. அடுத்துப் படத்தின் டிரைலகுக்கு தான் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.

ஆடியோ ரிலீஸ்
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம் என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது. கடந்த சில நாட்களில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இந்தத் திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.இதில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா உடன் கலந்து கொண்டார்.

சர்ச்சை
மேலும், இதில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டர். இந்த விழாவைக் காணக் காலை முதலே நேரு உள்விளையாட்டு அரங்கும் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். உள்ளே மிகப் பெரிய மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பாஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பாஸை வாங்காத சில ரசிகர்களும் அரங்கத்தில் நுழைய முயன்றால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் போஸ்டர்களை கிழித்தும், செருப்புகளை வீசியதால் அங்குச் சற்று பதற்றம் நிலவியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில போலீசாருக்கும் கூட காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சேதம்
நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வழக்கம் போல ஒரு குட்டி ஸ்டோரி சொல்லித் தெறிக்கவிட்டார். இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். விஜய் பேச பேச ரசிகர்களின் ஆரவாரம் தெறிக்கவிடும்படி இருந்தது. இதனிடையே உற்சாகம் மிகுதியில் இருந்த இருக்கைகளைச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுவாகப் பெரிய நிகழ்ச்சிகளில் இதுபோல இருக்கைகள் சேதமடைவது இயல்வான ஒன்று தான்.

அபராதம்
ஆனால், இதில் வழக்கத்தை விட அதிக இருக்கைகளை ரசிகர்கள் சேதப்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இப்பிடி மொத்தம் எத்தனை இருக்கைகள் தேசமாகியுள்ளன என்பதை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு தான், எத்தனை இருக்கைகள் சேதம் என்பது தெளிவாகத் தெரிய வரும். அதைப் பொறுத்து 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கவும் நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு vs துணிவு
தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதன் மூலம் விஜய் தனது தெலுங்கு மார்கெட்டை இந்தப் படம் மூலம் விரிவுபடுத்த முயல்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக் படல்களை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதே நாளில் தான் இயக்குநர் ஹெச் வினோத் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ரீலிசாவது குறிப்பிடத்தக்கது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications