குமரியில் ஜீரோ வாங்கிய விஜய்.. வாஷ்-அவுட் செய்த திமுக, அதிமுக! ரோடு ஷோ சென்றும் ஏமாற்றம்!
சென்னை: கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக தோல்வி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் விஜய் அலை பலமாக வீசியது. ஆனால், கன்னியாகுமரியில் ஒரு தொகுதியில் கூட விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் ரோடுஷோ சென்றார். சைக்கிளிலும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறது. 108 இடங்களை விஜய்யின் தவெக வென்றுள்ளது. சென்னை, கொங்கு பகுதியில் பல தொகுதிகளை கொத்தாக அள்ளிய தவெக பல மாவட்டங்களில் ஒரு வெற்றியை கூட பெறாத நிலை ஏற்படுள்ளது.

குமரியில் கோட்டைவிட்ட தவெக
அந்த வகையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக தோல்வி அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவியது.
இதில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியில் அதிமுகவும் வென்றுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றார். தளவாய் சுந்தரம் 74,904 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மகேஷை விட 214 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆஸ்டின் 69,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் 7,570 வாக்குகள் பெற்றார். குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் 66,207 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் சுமார் 64 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதி
பத்மநாபபுரம் தொகுதியில் கம்யூனிஸ்ட் சார்பில் செல்ல சுவாமி போட்டியிட்டார். இவர் 68,938 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து கிருஷ்ணகுமாரைவிட கூடுதலாக 5,569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய 69,378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மைக்கேல் குமாரை விட 20,530 வாக்குகள் அதிகம் பெற்றார் பிரவீன். இந்த தொகுதியில் பாஜக சார்பில் விஜயதாரணி போட்டியிட்டார். ஆனாலும் அவரும் தோல்வியையே சந்தித்தார்.
கிள்ளியூர் தொகுதி
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமார் 66,434 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய தவெக வேட்பாளர் சபீன் 65,123 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், 1,311 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளை பிடித்தது. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் முறையே பாஜக மற்றும் அதிமுக வென்றது. பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வென்றது. குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வென்று இருந்தது. இந்த முறையும் திமுக கூட்டணி தனது பலத்தை கன்னியாகுமரியில் நிரூபித்துள்ளது.
விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை
தமிழகம் முழுவதும் விஜய் அலை பலமாக வீசியது. கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினே தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் ரோடுஷோ சென்றார். சைக்கிளிலும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேசிய கட்சிகள் பலமாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் விஜய்யின் அலையால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் தவெகவை குறைத்தும் மதிப்பிட முடியாது. மாநில கட்சிகள் வெற்றி பெறாத தொகுதிகளான கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் 2 ஆம் இடம் பிடித்தது. தவெக வேட்பாளர்கள் கணிசமான வாக்கை பெற்று வியக்க வைத்தனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications