விஜய் கட்சியினரை 'அணில்' என அழைக்க காரணம் என்ன? காரணத்தை கூறி ட்ரோல் செய்யும் திமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் 'அணில்' என்ற பெயர் எதனால் வந்தது எனப் புரியாதவர்கள் இதை படிக்கவும் என்று கூறி ஒருபதிவினை திமுகவினர் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார். அந்த பதவில்,2011ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியை பிடித்தது.அதற்கு சிறு அணில் போல் உதவியதாக நடிகர் விஜய் கூறியிருப்பார். அதை வைத்து தான் ட்ரோல் செய்வதற்கான காரணத்தை திமுகவினர் கூறுகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாததத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் அதற்கான ஆயத்தப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை பாரபத்தி என்ற இடத்தில் அக்கட்சியின் தமிழக 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Vijay What is the reason for calling Vijay s party members Anil DMK trolls for the reason


விஜய் பேச்சு

இந்த விழாவில் தவெக தலைவரும்,நடிகருமான விஜய் பேசுகையில்,"1967, 1977-ம் ஆண்டுகளில் தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி, அதிகார மாற்றம் நடந்தது. அதேபோல் 2026 தேர்தலிலும் வரலாறு திரும்பப்போகிறது. இதை உறுதியாக சொல்வதுதான் இந்த 2-வது மாநாடு. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு, தமிழக அரசியலில் தட்பவெப்பத்தை மாற்றியது.

இந்த விஜய் பல லட்சம் பேர் கூடுகிற கூட்டத்தில் மட்டும் இருக்கிறார் என நினைத்துவிட வேண்டாம். வரப்போகிற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு நாம் வைக்கப்போகிற 'வேட்'டாக, நம்மை கோட்டைக்கு அனுப்ப போற 'ரூட்'டாக மக்களின் ஓட்டுகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நம்முடைய கொள்கை எதிரி பா.ஜனதாதான். அரசியல் எதிரி தி.மு.க.தான். ஊரை ஏமாற்றுகிற கட்சியல்ல த.வெ.க. யாருக்காகவும், எதற்காகவும் நாம் பயப்பட வேண்டியதில்லை. பெண்களின், இளைஞர்களின் சக்தி நம்மிடம் உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சக்தி நம்முடன் இருக்கிறது.

அடிமை கூட்டணி

நாமும் பா.ஜனதாவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?. த.வெ.க. என்பது மகத்தான வெகுஜன மக்கள் படை. நமது தலைமையில் அமைக்கப்போகிற மக்கள் ஆட்சிக்காக, இந்த அடிமை கூட்டணியில் நாம் ஏன் சேர வேண்டும்?.

ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்.சின் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது. என்னை நம்பி வருகிற அனைவருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு வழங்கப்படும். 2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி. ஒன்று த.வெ.க. மற்றொன்று தி.மு.க.

கச்சத்தீவு

3-வது முறையாக மத்திய அரசின் அதிகாரம் பிரதமர் மோடியிடம்தான் உள்ளது. மக்கள் உங்களிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. அவர்கள் சார்பாக உண்மையான பிரதிநிதியாக உங்களிடம் சில கேள்விகள் கேட்க இருக்கிறேன். நம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்குமேல் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உள்ளனர். அதை கண்டிக்க உங்களை பெரிதாக எதையும் செய்ய சொல்லவில்லை சிறிதாக ஒன்று மட்டும் செய்தால் போதும். இனிமேலாவது எங்களின் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள். அது போதும்.

பாஜக மீது கடும் தாக்கு

எங்களுக்கு தேவையான எதுவும் செய்ய மாட்டீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற நேரடியாக அடிமை கூட்டணி அமைக்கிறீர்கள். மக்கள் சக்தியே இல்லாத இ்ந்த ஊழல் கூட்டணியை மிரட்டி அடிபணிய வைத்து 2029 வரை சொகுசு பயணம் செல்லலாம் என திட்டம் தீட்டி வைத்துள்ளீர்கள். என்னதான் நேரடி, மறைமுக கூட்டணி என குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர்கூட ஒட்டாது. அப்படி இருக்கும்போது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள். இங்க ஒரு எம்.பி. சீ்ட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறீர்கள்.

கீழடி விஷயத்தில் உள்ளடி வேலை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது, இந்த மதுரை மண். கீழடியில் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டு, எங்களின் நாகரிகத்தையும், வரலாற்றையும் அழிக்கிற உள்ளடி வேலை செய்யலாம் என நினைக்கிறீர்கள்.தமிழ்நாட்டை தொட்டு பார்த்தால் என்ன நடக்கும் என பல உதாரணங்கள் உள்ளன. மதநல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன். உங்களின் எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது.

அதிமுகவின் நிலைமை

எம்.ஜி.ஆர். ஒரு 'மாஸ்'. அவர் உயிரோடு இருக்கும் வரை முதல்வர் சீட்டை பற்றி ஒருவராலும் கனவு காண முடியவில்லை.எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? இன்றைக்கு அந்த கட்சியின் நிலை என்ன? இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? அந்த கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர்.எந்த வேஷம் போட்டுக்கொண்டு பா.ஜனதா தமிழ்நாட்டுக்குள் வந்தாலும் அவர்களின் வித்தை வேலைக்கு ஆகாது. இப்படி பொருந்தா கூட்டணியாக பா.ஜனதா கூட்டணி இருப்பதால், தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, பாஜகவோடு உள்ளுக்குள் கூட்டணி வைத்துவிட்டு வெளியில் எதிர்ப்பதுபோல் நாடகம் போடுகிறது.

ஸ்டாலின் அங்கிள்

'ஸ்டாலின் அங்கிள், வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்...' தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆட்சி நடக்கும்போது நாம் எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும்.உங்களுக்கு மனசாட்சி இருந்தால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் நடத்தும் இந்த ஆட்சியில் நேர்மை இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? ஊழல் இல்லாமல் இருக்கிறதா? சட்டம்-ஒழுங்கு சரியா இருக்கிறதா? பெண்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

1000 தந்தால் போதுமா

டாஸ்மாக்கில் மட்டும் இதுவரை ரூ.1,000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். அதில் மட்டுமா நடந்திருக்கிறது. வேறு எதில்தான் நடக்கவில்லை?.பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா? படிக்கும் இடத்தில், வேலை பார்க்கும் இடத்தில், வெளியே செல்லும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்கள் காதில் கேட்கிறதா? இதில் உங்களை அப்பா என்று கூப்பிட சொல்கிறீர்கள். 'வெரி வெரி ராங் அங்கிள்'.

விஜய் தான் வேட்பாளர்

இப்போது நம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க போகிறேன். மதுரை கிழக்கு-விஜய், மதுரை மேற்கு-விஜய்...234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர். இன்னும் சொல்லப்போனால் உங்கள் வீட்டில் இருப்பவர்கள்தான் வேட்பாளர்கள். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை.நீங்கள் அவர்களுக்கு ஓட்டுபோட்டால் எனக்கு ஓட்டுபோட்ட மாதிரிதான். இந்த முகத்துக்காக நீங்கள் ஓட்டு போட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் உங்களுடைய வேட்பாளர் வெற்றி பெற்றது மாதிரிதான்.

ரிட்டையர்டு ஆகி வரல

நான் மார்க்கெட் போன பின்னோ, 'ரிட்டையர்டு' ஆன பின்னோ அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மக்களாகிய நீங்கள்தான் என்னுடன் இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டீர்கள். நான் உயிராக நினைப்பது பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், உழைக்கும் மக்களைதான். இவர்கள்தான் நம்முடைய வகையறா.இவ்வளவு செய்த மக்களுக்கு நன்றிக்கடனை தீர்க்க முடியுமா என்று கேட்டால், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாது. வாழ்நாள் முழுக்க நம் மக்களுக்கு ஆதரவாக உழைப்பதை தவிர, அவர்களுக்கு துணையாய் நிற்பதை தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை" இவ்வாறு விஜய் பேசினார்.

திமுக ட்ரோல்

நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.அந்தவகையில்விஜய் மற்றும்அவரது கட்சியினரை அணில் என்று திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.இது தொடர்பாக திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவில், : விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் 'அணில்' என்ற பெயர் எதனால் வந்தது எனப் புரியாதவர்கள் இதை படிக்கவும் என்று கூறியுள்ளார். 2011ம்ஆண்டு மே 30ம் தேதி பிரபல செய்தி ஊடகத்தில் வந்த விஜய்யின்பேச்சு அந்த பதிவில்இருந்தது.

Vijay What is the reason for calling Vijay s party members Anil DMK trolls for the reason

அணில்

அதில் உள்ள தகவல் அப்படியே.. அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய நடிகர் விஜய், "ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சிஅடைகிறேன் என்று கூறினார். சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நடிகர் விஜய்,தனதுமக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய விஜய், அம்மாவின் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக, நமதுஇயக்கம் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டேன். நீங்கள் வெற்றிக்கு முழுமூச்சோடு உழைத்தீர்கள்.ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய நாமும் ஓர் அணிலாய் இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்பதாக செய்தி இருந்தது. இதைத்தான் கூறி திமுகவினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+