விசிக நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தால்.. விஜய பிரபாகரன் சொன்ன தகவல்!
சென்னை: விசிக நடத்த உள்ள போதை ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் முறையாக அழைத்தால் தலைமையில் பேசி கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்போம் என தேமுதிக விஜய பிரபாகரன் தெரிவித்து உள்ளார். மதவாத, சாதியவாத கட்சிகள் தவிர மற்ற கட்சிகளை அழைப்போம் என திருமாவளவன் கூறிய நிலையில் விஜய பிரபாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சுமார் 67 பேர் உயிரிழந்த நிலையில், பலரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அரசே மது விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. வி.சி.க மகளிரணி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறுவது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், “மக்கள் பிரச்சனைகளுக்காக மதவாத, சாதியவாத சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளுடனும் இணைவோம். மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடில் உள்ள கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்றார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் 67 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய பிரபாகரன்.
அப்போது, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்துள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “திருமாவளவன் மாற்று கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இருந்தாலும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சி தலைமையில் பேசி மாநாட்டில் கலந்து கொள்வது கொடுத்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications