விஜயகாந்தின் நீண்ட நாள் நிறைவேறாத ஆசை! மகன் விஜயபிரபாகரனின் உருக்கமான சபதம்!
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு நிறைவேறாத நீண்ட நாள் ஆசை இருப்பதாக அவருடைய மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது!

எனவே தேமுதிகவுக்கு மக்கள் எந்த மாதிரியான ஆதரவு அளிப்பார்கள் என்பதை பொறுத்துதான் அந்த கட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு லட்சோப லட்ச மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் எல்லாருமே தேமுதிகவினர் என சொல்லிவிட முடியாது. விஜயகாந்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். இதனால் சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்றும் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நாள்தோறும் மக்கள் கூட்டம் வரத்தான் செய்கிறார்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் வெல்வாரா என்ற கேள்வி எழுகிறது. அதிமுகவுடன் கூட்டணி, சீனியர் அமைச்சர்கள் பிரச்சாரம், விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகரில் உள்ளது, விஜயகாந்த் மீதான விருதுநகர் மக்களின் பாசம், விஜயகாந்தின் சமூக மக்களின் வாக்குகள்... இப்படியாக விஜய பிரபாகரனுக்கு பாசிட்டிவ்கள் உள்ளன.
இந்த நிலையில் விஜய பிரபாகரன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. நான் சிறு வயதில் உடல் பருமனாக இருந்தேன். அவரை போல் நான் இருப்பதாக அடிக்கடி சொல்வார்.
எனவே நான் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற உடல் பருமனை குறைத்துவிட்டு வந்த போது அப்பாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நான் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஜெட்லியின் சீனப்படமான My Father is a hero என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் நடிக்க வேண்டும் என அப்பா மிகவும் விரும்பினார்.
ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. எனினும் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம். இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்தார். அதே வேளையில் அரசியலுக்கு வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விஜயகாந்த் தனக்கு சொல்லிக் கொடுத்ததாக தெரிவித்தார்.
சில இடங்களில் நான் பேசிய பேசுக்களை கூட அவர் என்னிடம் கண்டித்திருக்கிறார். நான் எந்த சூழலில் அப்படி பேசினேன் என விளக்கியும் அவர் என்னை கண்டித்தார். அரசியலில் நாகரீகம் மிகவும் முக்கியம் என்பார் என்றும் விஜய பிரபாகரன் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications