தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்வோருக்கு தலைகுனிவு.. 50000 பேர்.. என்ன கொடுமை இது.. விஜயகாந்த் வேதனை
தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தலைகுனிவு என விமர்சித்துள்ளார் விஜயகாந்த்.
சென்னை : பிளஸ் 2 தமிழ் மொழி பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 12ஆம் வகுப்பு நேரடி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என அனைவருக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்விற்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வராதது அதிர்ச்சி அளித்துள்ளது. பள்ளி மாணவர்களில் 49559 மாணவர்களும் தனித் தேர்வர்களில் 1115 பேரும் தமிழ் தேர்வை எழுத வரவில்லை.

புரியாத புதிர்
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் தமிழ் மொழி தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்தது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

அமைச்சர், அதிகாரிகளே பொறுப்பு
நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பொதுத் தேர்வை இத்தனை ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடா - தமிழகமா
கல்விக்கண் திறந்த காமராஜரால் கல்வியில் தமிழ்நாடு முதன்மை இடத்தில் இருந்த நிலையில், தற்போது கல்வியின் தரம் குறைந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது. தமிழ் மொழி நம் தாய் மொழியாக இருக்கும் நிலையில், தமிழ் மொழி தேர்வை எழுத இத்தனை ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. தமிழ் மொழியின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தலைகுனிவு
தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு தலைகுனிவு. தேர்தலின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவது போல், தேர்வுகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications