மகன்கள் மீது அப்படி கேர் எடுத்துக்கொண்ட விஜயகாந்த்! கடைசி வரை 2 விஷயத்தில் ஆளு ரொம்ப ஸ்டிரிக்ட்!
சென்னை: பெயர், புகழ், பணம், வசதி வாய்ப்பு என எதிலும் குறைச்சல் இல்லாத வாழ்க்கை இருந்த போதும், 2 விஷயத்தில் மட்டும் தனது மகன்களை மிடில் கிளாஸ் அப்பாக்களை போலவே ட்ரீட் செய்திருக்கிறார் விஜயகாந்த்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்லக்கூடாது, அப்படி சென்றாலும் நேரமே வீட்டுக்கு வர வேண்டும், செகண்ட் ஷோ படத்துக்கு போகக்கூடாது என இந்த 2 விஷயங்களிலும் கடைசி வரை மகன்களிடம் ஸ்டிரிக்டாவே இருந்திருக்கிறார் விஜயகாந்த். இதன்மூலம் என்ன வேணாலும் பண்ணுங்க, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்வியல் முறைகளை மகன்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தே கூறியிருக்கிறார். இதனிடையே விஜய பிரபாகரனும் சரி, சண்முகபாண்டியனும் சரி எந்த விஷயத்திலும் தங்கள் தந்தை விஜயகாந்தை பேச்சை மீறி நடந்துக் கொண்டதில்லை என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
இரவு 10 மணிக்குள் பிள்ளை வீடு வந்து சேர வேண்டும் , இரவில் வெளியே போகக்கூடாது என ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தந்தை எப்படி தனது மகன் மீதுள்ள அக்கறை காரணமாக கூறுவாரோ அதே அக்கறையை தனது 2 மகன்களிடமும் காட்டியவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் மறைந்து 15 நாட்கள் ஆகியும் அவர் குறித்த சுவாரஸ்யமான புதுப் புதுத் தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தனை நாட்களாக எங்கே இருந்தீங்க எனக் கேட்கும் அளவுக்கு அவருடன் பழகியவர்கள், அவரிடம் வேலை பார்த்தவர்கள், பழைய நண்பர்கள் என பலரும் விஜயகாந்தின் குணாதிசயங்கள் பற்றி ருசிகரத் தகவல்களை கூறி வருகின்றனர்.
இதனிடையே விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணியில் விரைவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் எல்.கே. சுதீஷ் வசம் பிரேமலதாவிடம் உள்ள பொருளாளர் பதவி தரப்படலாம் எனவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications