துரோகம்! டென்ஷன்! அன்றே விஜயகாந்தின் மூளை நரம்பு "வெடித்து"! குழறி போன வார்த்தைகள்- பிளாஷ்பேக்
சென்னை: விஜயகாந்தின் உடல்நலம் எப்போது பாதிக்கப்பட்டது யாரால் பாதிக்கப்பட்டது என்பது குறித்த பிளாஷ்பேக் தற்போது வைரலாகி வருகிறது.
தங்கமனசுக்காரன் விஜயகாந்த்! மதுரையில் பெரிய அரிசி ஆலை அதிபரின் மகனாக பிறந்தாலும் சினிமாவில் சாதித்தே தீருவேன் என கூறிக் கொண்டு சென்னை வந்தார். அங்கு வாய்ப்பு தேடி அலையும் போது சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு இடைவேளையின் போது செல்வாராம்.

அப்போது விஜயகாந்திடம் எதையுமே சொல்லாமல் அங்கிருப்பவர்கள் சாப்பிட சென்றுவிடுவார்களாம். விஜயகாந்துக்கு பசி வயிற்றை கிள்ளி எடுக்குமாம். ஆனால் அவரை ஒருவரும் சாப்பிட அழைக்க மாட்டார்களாம்.
இதையடுத்து ஹீரோ வாய்ப்பு கிடைத்த போது புரொடெக்ஷன் யூனிட்டில் சாப்பாடு வருமாம். ஆரம்ப கட்ட ஹீரோ என்பதால் அப்போதெல்லாம், ஸ்டார்களுக்கு தனி சாப்பாடு, லைட் மேன்களுக்கு தனி சாப்பாடு, மற்ற நடிகர்களுக்கு தனி சாப்பாடு என வழங்கப்படுமாம்.
அப்படி ஒரு முறை அவர் ஹீரோவாக நடித்த படத்தில் அவரை விட பிரபல நடிகை ஹீரோயினாக நடித்து வந்தாராம். அப்போது காலை உணவு சாப்பிட அந்த ஹீரோயின் தாமதமாக வந்தாராம். அதுவரை அங்கிருந்தவர்களுக்கு உணவு பரிமாறப்படவில்லையாம். விஜயகாந்துக்கு ஒரே பசியாம். பின்னர் ஹீரோயின் தாமதமாக வந்ததும் உணவு சாப்பிட ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது விஜயகாந்த் சாப்பிட உட்கார்ந்தாராம். அங்கிருந்தவர்கள் அவரை மனிதராக கூட மதிக்காமல் எழுந்திருக்குமாறு கூறி ஹீரோயின் உள்ளிட்ட பெரிய கலைஞர்கள் சாப்பிட்டவுடன்தான் சாப்பிட வேண்டும் என தெரிவித்தார்கள். சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பினால் எத்தனை பாவம், அந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் அவரை எழுப்பினார்களாம்.
இவையெல்லாம் விஜயகாந்தின் மனதில் வடுக்களாக இருந்தன. இதனால்தான் அவரது அலுவலகத்திற்கு வருவோருக்கு வயிறார உணவு வழங்கினார். அவரது அலுவலகத்தில் தினமும் குறைந்தது 50 பேருக்காவது கறி விருந்து வழங்குவாராம். விஜயகாந்தின் அலுவலகத்திற்கு வருவோர் , வேறு எந்த அலுவலகத்திலாவது வாய்ப்பு கேட்டு வருவோர் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் விஜயகாந்த் ஆபிஸுக்கு போய் வயிறார சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்களாம்.
விஜயகாந்த் மீது இதுவரை யாரும் ஒரு குறை கூட சொன்னது கிடையாது. அவர் அனைவருக்கும் பொதுவானவர். தொண்டர்கள், ரசிகர்களை தாண்டி பொதுமக்களும் விஜயகாந்தை விரும்புவார்கள். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்டவர் மக்களுக்கு உதவி செய்ய தேமுதிக எனும் கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே விஜயகாந்துக்கு வெற்றி கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அதில் 44 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 2ஆவது இடத்தில் தேமுதிக வென்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விஜயகாந்த் பெற்றார்.
இதையடுத்து அப்போதைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்ந்தது. இதை கூட்டணியில் இருந்தாலும் விஜயகாந்த் தட்டி கேட்டார். அப்போது சட்டசபையில் மக்களுக்காக ஜெயலலிதாவை விஜயகாந்த் கடுமையாக எதிர்த்தார்.
இதைத் தொடர்ந்து 29 எம்எல்ஏக்களில் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களே விஜயகாந்தை விட்டு பிரிந்து போனார்கள். இதனால் அவருடைய கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் குறைந்தது. இதன் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை. விஜயகாந்துக்கு அரசியலில் தொடர்ந்து தோல்வியே கிடைத்தது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை எப்போது எதனால் பாதிக்கப்பட்டது என்பது குறித்து நடிகர் தியாகு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்தார்கள். பிறகு அவர் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த 29 எம்எல்ஏக்களை உடைத்து சிதற வைத்தார்கள். இதை முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்தனர். அப்போதே வேதனை அடைந்த விஜயகாந்தின் மூளை நரம்பு வெடித்து சிதறி வார்த்தைகள் குழறி போய்விட்டன என வேதனையுடன் தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications