கன்னத்தை பிடித்து கிள்ளி.. மீண்டும் "கை" கொடுக்குமா பாஜக.. விஜயகாந்த் வீட்டில் வெடித்த பஞ்சாயத்து..!

பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனித்து போட்டி என்று தேமுதிகவின் பிரேமலதா அறிவித்து விட்ட நிலையில், அக்கட்சியில் சில அதிருப்தி குரல்கள் வெடித்து வருகின்றன.. இதன்காரணமாக பிரேமலதா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அக்கட்சியை சரிவில் இருந்து யாராலும் மீட்க முடியவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு எம்பி தேர்தல், அதை தொடர்ந்து வந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக.. ஆனால், 2021-ல் சட்டமன்றத் தேர்தலை அமமுகவுடன் இணைந்து எதிர்கொண்டது..

 விருப்ப மனுக்கள்

விருப்ப மனுக்கள்

இதற்கு பிறகு, 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.. இதில் என்ன சோகம் என்றால், தனித்து போட்டி என்று பிரேமலதா அன்று அறிவித்திருந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வாங்குவதற்குகூட ஆளில்லாமல் போனது.. முதல் நாள் மட்டுமே சிலர் வந்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் யாருமே வரவில்லை.. போட்டியிடவும் ஆர்வம் காட்டவில்லை.

 அதிமுக

அதிமுக

இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்களில் பலர் திமுகவிலும், சிலர் அதிமுகவிலும் இணைந்துவிட்டது, அதற்கு மேல் சறுக்கலை தந்தது.. இதற்கு பிறகு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் தேமுதிகவின் தற்போதைய நிலைமை குறித்து ஓரிரு தகவல்கள் கசிந்து வருகின்றன.

 வேலைகள்

வேலைகள்

தேர்தலில் போட்டியிட கட்சியினரை தயார்படுத்தும்படி மாவட்ட செயலாளர்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார் பிரேமலதா.. மாவட்ட செயலாளர்களும் அதற்கான வேலைகளில் சுறுசுறுப்புக் காட்ட , நிர்வாகிகளோ, "தேர்தலில் போட்டியிட எங்களிடம் பணமும் இல்லை, விற்பதற்கு சொத்துக்களும் இல்லை... இந்த முறை கட்சி தலைமைதான் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்" என்று ஒருமித்த குரலில் சொல்லி வருகிறார்களாம்..

அப்செட்

அப்செட்

இதனை பிரேமலதாவிடம் மா.செ.க்கள் தெரிவித்துள்ளனர். இதனையறிந்து அப் செட்டாகியிருக்கிறார் பிரேமலதா.. இதற்கிடையே, விஜயகாந்தின் குடும்ப சொத்தான ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்று விடலாமா என்கிற பேச்சு விஜயகாந்த் குடும்பத்தில் எதிரொலிக்கிறது. ஆனால், விஜயகாந்தின் வாரிசுகள், கல்லூரியை எந்த சூழலிலும் விற்கக் கூடாது என அழுத்தமாக சொல்லிவிட்டனராம். எனவே, கல்லூரியை விற்பது தள்ளிப்போடப்பட்டுள்ளது.

 முறிவு?

முறிவு?

இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்காது என்றும், அதிமுகவை விட்டு பாஜக வெளியேறும் பட்சத்தில் அதனுடன் கூட்டணி வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்லி உள்ளனர்.. எப்படியும் அதிமுக - பாஜக கூட்டணி முறியும் என்பதால், அப்போது தேர்தல் செலவுக்கு பாஜக தலைமையிடம் கேட்கலாம் என்றும் பிரேமலதாவிடம் குடும்ப உறுப்பினர்கள் யோசனை சொல்லியுள்ளனராம்... காரணம், பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, விஜயகாந்த் மீது தனி பாசம் வைத்திருக்கிறது. நிறைய மதிப்பும் வைத்திருக்கிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் என்றால் தனிப்பட்ட முறையில் நிறைய ப்ரியம் உண்டு.. ஒருமுறை பிரதமர் மோடி, விஜயகாந்த்தின் கன்னத்தை தட்டி பாராட்டியதை தமிழகமே அன்று ஆச்சரியமாக பார்த்தது.. அதேபோல பிரேமலதாவின் பிரச்சாரங்கள் அனைத்தும், பாஜக மேலிடத்தை ஈர்த்து விடும்.. அந்த வகையில் தேமுதிகவை பாஜக இந்த முறை கைவிடாது என்றும் சொல்கிறார்கள்.. எப்படியோ, தேமுதிகவின் வாக்கு விகிதம் படிப்படியாக குறைந்து, இப்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்ட நிலையில், இதை எப்படி சரிக்கட்ட போகிறது என்பதும் எதிர்பார்ப்புதான்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+