"கிசுகிசு".. யாரந்த 3 எழுத்து பிரபல நடிகை.. அதைவிடுங்க.. போனை போட்ட ஜெயப்பிரதா.. பலே விஜயகாந்த்.. செம
சென்னை: விஜயகாந்த்தின் துணிச்சல் குறித்து, பிரபல நடிகர் பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம், தேமுதிக தொண்டர்களையும் தாண்டி, திரைத்துறையில் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த்தின் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் மீது தனிப்பட்ட மரியாதையும், அபரிமிதமான பற்றும் வைத்திருப்பவர் மீசை ராஜேந்திரன்.. தன்னுடைய எல்லா பேட்டிகளிலும் விஜயகாந்தின் ஈகை குணம் குறித்தும், ஈர மனசு குறித்தும் நெகிழ்ந்து பேசுவார்..

விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு உதவியது குறித்த பல நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்தும் கொள்வார். சில நாட்களுக்கு முன்புகூட, ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றை மீசை ராஜேந்திரன் விடுத்திருந்தார்.
ஈரமனசு: "விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைத்தவர். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பதை சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.. இப்போது, ஒரு பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்திருக்கிறார்.. அந்த பேட்டியில், விஜயகாந்த் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிசுகிசுக்கள்: "கிசுகிசுக்கள் அவ்வளவாக வந்ததில்லை.. ஒரு குறிப்பிட்ட ஹீரோயினுடன் அதிகமாக நடிச்சார்... அவருடன் மட்டும் 19 படங்கள் இணைந்து நடித்தார்.. அவர் 3 எழுத்து நடிகை.. இவர்களின் காதல் கல்யாணம் வரையும் போனது. ஆனால், அதற்குள் ராவுத்தர் அண்ணன் குறுக்கிட்டு, அதை நிறுத்திவிட்டார்.. வேணாம் விஜி என்று சொல்லி நிறைய அட்வைஸ் செய்தார்.. ஆனால், நிறைய ஹீரோக்கள் மாதிரி, நிறைய ஹரோயின்களுடன் விஜயகாந்த் கிசுகிசுக்கப்படவில்லை.. ஒரே ஒரு ஹீரோயின் மீது மட்டும் கிசுகிசு வந்தது.. அதுவும் அப்போதே முறிந்துவிட்டது.
அதேபோல, ஒரு விஷயம், தவறு என்று தெரிந்தால் போதும்.. உடனே வேட்டிய மடிச்சி கட்டிட்டி இறங்கிடுவார் விஜயகாந்த்.. ஏழை ஜாதி படம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது.. நடிகை ஜெயப்பிரதாவின் படம் அது.. ஷுட்டிங் வெளிமாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக அனைவருமே, ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்கள்.. ஷூட்டிங் இல்லாத நேரத்தில், நடிகைகள் உட்பட பலரும் ஷாப்பிங் போவதாக சொல்லிவிட்டு கிளம்பி போயிருக்காங்க..
அப்போது, விஜயகாந்த்திடம், "சார் ஒரு நிமிஷம், உங்களுடன் வந்தவர்கள் வெளியில் இருந்து, போன் செய்து கொண்டே இருக்கிறார்கள்.. ஓட்டலில் யாராவது தங்கி இருந்தால், அவர்களிடம் போனை தர சொல்லுகிறார்கள்" என்று ரிசப்ஷனில் இருந்தவர்கள் சொன்னார்கள்.. உடனே விஜயகாந்த் அந்த போனை வாங்கி பேசினார்.. அங்கே எதிர்முனையில் ஜெயப்பிரதா பதற்றத்துடன் பேசியுள்ளார்.. "நாங்க எல்லாரும் ஷாப்பிங் வந்தோம்.. எங்களை இங்கே ஷாப்பிங் மாலில் 7 பேர் கிண்டல் பண்ணிட்டு, கடையில் இருந்து வெளியே வரவிடாமல், கலாட்டா செய்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
டென்ஷன் விஜி: இதைக்கேட்டு டென்ஷன் ஆன விஜயகாந்த், உடனே கிளம்பிட்டார்.. டிரைவரும் இல்லை.. அதனால், அவரே காரை எடுத்துக் கொண்டு, அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தேடி போனார்.. அங்கு ரவுடித்தனம் செய்து கொண்டிருந்த 7 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தார்.. 7 பேருமே அலறிகொண்டு ஓடிவிட்டார்கள்.. இத்தனைக்கும் ஊர் தெரியாது.. பேர் தெரியாது.. மொழி தெரியாது.. யாராவது இங்கிலீஷில் பேசினாலும் கடுப்பாயிடுவாரு.. இன்னொரு மாநிலத்துக்கு வந்துள்ளோம் என்றுகூட யோசிக்கவில்லை.. பெண்களை கிண்டல் செய்தவர்களை அடித்து விரட்டியிருக்கிறார்.. இப்படி எத்தனையோ சம்பவங்கள் உள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications