"இடிக்குதே".. புரட்டி போட்ட "செங்கோல்".. பாஜகவுக்கு "இவரும்" ஆதரவு.. திமுக முடிவு என்ன? அப்ப எடப்பாடி
சென்னை: செங்கோல் விவகாரத்தில் பாஜகவுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்தை சொல்லி உள்ளது தேமுதிக.. மேலும், கனிமவள கொள்ளை உட்பட தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது, இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள் என்று திமுக + அதிமுகவையும் விமர்சித்துள்ளது தேமுதிக..!!!
தேமுதிகவை பொறுத்தவரை, இதுவரை பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தது இல்லை.. பெரிதாக கண்டித்ததும் இல்லை.. தேமுதிக மீது பாஜக மேலிடத்துக்கு ஒருவித சாப்ட் கார்னர் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது..
அதிலும் விஜயகாந்த் என்றால், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. எனினும், கடந்த முறை, கூட்டணி விஷயத்தில், பாஜக மேலிடம் தேமுதிகவை கைவிட்டு விட்டதாகவே சொன்னார்கள்..

விஜயகாந்த்:
அந்த சமயத்தில் தமிழக பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி, கெடுபிடி காட்டியபடி இருந்தால், தங்களுக்கு தேவையான சீட்டுக்களைகூட பாஜகவால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அமமுகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னதுபோலவே, தேமுதிகவையும் இணைத்து கொள்ள பாஜக சொன்னதாம்.. ஆனால், அதிமுக மேலிடம் அதை கேட்காமல், தேமுதிகவை கமடசி நேரத்தில் கழட்டிவிட்டதாக செய்திகள் கசிந்தன. இதற்கு பிறகுதான், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவும் நேர்ந்தது..
இதெல்லாம் பழைய கதை என்றாலும், பாஜகவுடனான பற்று தேமுதிகவுக்கு எப்போது இருக்கிறது என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரம் காரைக்காலில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக சொல்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதும், இப்போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுகிறோம் என அறிவித்திருப்பதாலும் எந்தப் பயனும் இல்லை. இது கண்துடைப்பு நாடகம்.
காங்கிரசுக்கு வாழ்த்து:
கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தது. இப்போது, காங்கிரசிற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கேப்டனும் நானும் அந்த ஆட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தார்..
திடீரென பாஜகவின் செயல்பாட்டை தேமுதிக விமர்சித்திருந்ததும், காங்கிரசுக்கு வாழ்த்து சொல்லியிருந்ததும், அனைவராலும் கவனிக்கப்பட்டது. எனினும், செங்கோல் விஷயத்தில் பாஜகவை உயர்த்தி பிடித்து, அதற்கான காரணங்களையும் சொல்லி, வழக்கம்போல் ஆதரவை அள்ளி வழங்கியுள்ளது தேமுதிக.

படுகொலை:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரியும், ஆலங்குளத்தில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது..
இதில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?
தலைக்குனிவு:
உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? விஏஓ குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா? நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?. 3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும்.. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை" என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

சபாஷ் முன்னேற்றம்:
மக்களுடன் அவ்வளவாக நெருங்கி இருப்பதில்லை என்றும், மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை, தேமுதிக குறைவாக போராட்டங்களை நடத்துவதாகவும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.. ஆனால், இந்த குறைகளை தேமுதிக உடைத்து கொண்டு முன்னேறிவருவது, அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.. அத்துடன், விஜயபிரபாகரனின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் அதிகமாகி வருகின்றன.. இவைகள் எல்லாம் சோர்ந்து போயிருந்த தேமுதிக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வருவதாகவே தெரிகிறது.
அதேசமயம், திமுக + அதிமுக என இரு கட்சிகளையும் மாறி மாறி விமர்சித்துள்ளதால், யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற குழப்பமும் அதிகமாகி உள்ளது..
அனுமானங்கள்:
அதேசமயம், திமுகவை கண்டித்து போராட்டங்களை கட்டமைத்து வரும்நிலையில், பாஜகவுடன் நெருங்கியே இருக்கும்நிலையில், எப்படியும் அதிமுகவுடன்தான் தேமுதிக கூட்டணி வைக்கக்கூடும் என்றும் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கப்படும் என்று அனுமானங்கள் வட்டமடிக்க துவங்கி உள்ளன.. ஒருவேளை அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க, கடந்த முறைபோலவே, இந்த முறையும் பாஜக அழுத்தம் தரநேர்ந்தால், எடப்பாடி பழனிசாமி இந்த முறை என்ன முடிவெடுப்பார்? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications