வில்லிவாக்கம் பெரிய ஏரியா கிடையாது.. நாளைக்கு விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்? பதறும் பெற்றோர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி கிடைத்திருக்கிறது. வில்லிவாக்கம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய ஏரியா கிடையாது. இப்படி இருக்கையில், இங்கு நெரிசல் ஏற்படாமல் விஜய் எப்படி கூட்டத்தை கையாள போகிறார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

குறிப்பாக விடுமுறையில் உள்ள தங்கள் பிள்ளைகள், விளையாட போகிறேன் என்று சொல்லிவிட்டு, விஜய்யை பார்க்க சென்று நெரிசலில் சிக்கிவிடக்கூடாது என்று பெற்றோர் பதற்றமடைந்திருக்கின்றனர்.

Vijay s Villivakkam

வில்லிவாக்கத்தில் பரப்புரை

வில்லிவாக்கம் சிட்கோநகரில்தான் விஜய் நாளை பரப்புரை செய்ய இருக்கிறார். சிட்கோநகர் என்பது, பாடி மேம்பாலத்திலன் இறக்கப்பகுதி. இங்கு சும்மாவே டிராபிக் இருக்கும். தினமும் மாலை 4-9 வரை சிட்கோநகர் பயங்கர நெரிசலாக இருக்கும். இந்த நேரத்தில் சிட்கோ நகரை கிராஸ் செய்வதற்குள், ஆர்டெமிஸ் ராக்கெட்டில் நிலாவுக்கு போனவர்களை மீண்டும் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எல்லோருக்கும் சிக்கல்

அப்படிப்பட்ட பகுதியில் பிரச்சாரம் எனில் நிச்சயம் நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில், இங்கு மக்கள் தொகை அடர்த்தி அதிகம். விசாலமான தெருக்கள் கிடையாது. சிட்கோநகர் பஸ் ஸ்டாப்பில் விஜய் பிரச்சாரம் செய்கிறார் எனில், பாடி மேம்பாலம் விஜய் ரசிகர்களால் நிரம்பி வழியும். குமாரசாமி நகர் தெருவுக்குள் போக முடியாது. ஆவடி, அம்பத்தூரிலிருந்து சென்ட்ரல், எழும்பூர் செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல் பாடி பாாலத்தில் தொடங்கி, நாதமுனி தியேட்டர் வரை வரிசை கட்டியிருக்கும். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் போக வேண்டும் எனில், மாற்று வழி கிடையாது. விஜய் பிரச்சாரம் செய்யும் அந்த 1-2 மணி நேரம் உள்ளூர் மக்கள் ரொம்பவும் கடுப்பாகிவிடுவார்கள். ஏனெனில், தெருக்களிலிருந்து மெயின் ரோட்டுக்கு வர எல்லா வழியையும் விஜய் ரசிகர்கள் அடைத்திருப்பார்கள்.

ஐசிஎஃப் பெட்டர்

எனவே விஜய், சிட்கோ நகரை தேர்ந்தெடுத்ததற்கு பதில், ஐசிஎஃப் பகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அங்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கும். விஜய் இந்த விஷயத்தில் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+