விளவங்கோடு முதல் ஊட்டி வரை! காங்கிரஸின் 27 வேட்பாளர்கள்! பாஜகவுடன் ஸ்ட்ரைட்டா மோதும் 4 தொகுதி!
சென்னை: காங்கிரஸ் கட்சி தனது 27 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் தங்களின் வியூகத்தை அதிரடியாக தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் மேலூர் நீங்கலாக மற்ற இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் விமர்சகர்களின் பார்வை தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதிக் கொள்ளும் அந்த 4 தொகுதிகளின் பக்கம் திரும்பியுள்ளது. அது என்ன தெரியுமா?
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நெவிளவங்கோடு, குளச்சல், ஊட்டி மற்றும் அறந்தாங்கி ஆகிய இந்த 4 தொகுதிகளும் வெறும் வெற்றி-தோல்விக்கான களமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.. அதுமட்டுமல்ல, , இது 2 தேசியக் கட்சிகளின் பலப்பரீட்சைக்கான களமாகவும் பார்க்கப்படுகிறது.

விளவங்கோடு தொகுதி
குமரி மண்ணின் மிக முக்கியமான தொகுதியான விளவங்கோடு, பல வருஷமாகவே காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. 2011 முதல் காங்கிரஸ் வசம் இருக்கும் இந்த தொகுதியில், கடந்த முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி இப்போது தாமரை சின்னத்தில் களம் காண்பதுதான் இந்த தேர்தலின் மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட்.
காங்கிரஸின் பிரவீன் மற்றும் பாஜகவின் விஜயதாரணிக்கு இடையிலான இந்த மோதல், கொள்கைக்கும் தனிநபர் செல்வாக்கிற்கும் இடையிலான போராக உருவெடுத்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தாலும், விஜயதாரணியின் கட்சி மாற்றம் தொகுதியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
குளச்சல் தொகுதி
அதேபோல் குளச்சல் தொகுதியைப் பொறுத்தவரை, 2006 முதல் காங்கிரஸ் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டி வருகிறது. கடந்த 3 தேர்தல்களில் பிரின்ஸ் வசமிருந்த இந்த தொகுதியில், இந்த முறை இடைத்தேர்தல் வெற்றியாளர் தாரகை கத்பர்ட் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாரம்பரியமாக காங்கிரஸின் ஆதிக்கம் நிறைந்த இந்த மண்ணில், பாஜகவின் சிவகுமார் எத்தகைய சவாலை அளிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காங்கிரஸின் பக்கம் நின்றாலும், இப்போதைய அரசியல் சூழலில் பாஜக அளிக்கும் கடும் நெருக்கடி, இந்தத் தொகுதியை செம டென்ஷனில் வைத்துள்ளது.
பாஜக - காங்கிரஸ்
புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி தொகுதி, ஒரு காலத்தில் அதிமுகவின் பலமான இடமாக இருந்தாலும், கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் அதைத் தன்வசமாக்கினார்.
மறுபடியும் அவரே களம் காணும் நிலையில், பாஜகவின் கவிதா ஸ்ரீகாந்த் அவருக்குப் போட்டியாக நிற்கிறார். அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே மாறி மாறி கைமாறிய இந்த தொகுதியில், பாஜக ஒரு புதிய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தப் போராடுகிறது. இருந்தாலும், இப்போதைய கணிப்புகள் ராமச்சந்திரனுக்குச் சாதகமாக இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
அண்ணாமலை பிரச்சாரம்?
மலையக அரசியலின் மையப்புள்ளியான ஊட்டி தொகுதியிலும் காங்கிரஸின் கை ஓங்கியே காணப்படுகிறது. கடந்த முறை கணேஷ் வெற்றி பெற்ற இந்த இடத்தில், இப்போது ராமச்சந்திரன் காங்கிரஸ் சார்பாகக் களம் காண்கிறார். பாஜகவின் போஜராஜன் இவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். எனவே வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த 4 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி ஒரு பலமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
"பாஜகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பரப்புரை செய்வேன்" என அண்ணாமலை உறுதியளித்துள்ள நிலையில், இந்த 4 தொகுதிகளிலும் பாஜக தனது வாக்குகளைப் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸின் வரலாற்று ரீதியான ஆதிக்கத்தை பாஜகவின் புதிய எழுச்சி வீழ்த்துமா அல்லது காங்கிரஸின் கோட்டைகள் இம்முறையும் தப்புமா? என்பதுதான் இந்த தேர்தலில் ட்விஸ்ட்!! பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications