12,525 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்... தமிழகம் முழுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம்(ஜனவரி 26), தொழிலாளர் தினம்(மே 1), சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தியின் பிறந்தநாள் (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 22ல் சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கூடுதலாக 2 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகியவற்றோடு கூடுதலாக உலக தண்ணீர் தினம்(மார்ச் 22), உள்ளாட்சிகள் தினம்(நவம்பர் 1) ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தொழிலாளர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கிராம சபை சபை கூட்டம் பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். இதுதொடர்பாக விவாதகம் நடத்தப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என்பதும், கொரோனா விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications