சிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி!
சிங்கப்பூர் ரோட்டில் மகனை காண சென்ற தாய் ஒருவர் மிளகாய் காய வைத்துள்ளார்.
Recommended Video

சென்னை: சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய காட்சி மனதை உருக்குலைய வைத்துள்ளது.
முன்பெல்லாம் வீட்டில் பெண்களுக்கு மிளகாய் அரைப்பது என்பதே பெரிய வேலை. இதற்காக மிளகாய், தனியா, மஞ்சள் பொருட்களை வாங்கி சுத்தப்படுத்துவர். பிறகு அதை வெயிலில் காய வைத்து எடுத்து, அதனை வாணலியில் லேசாக வாட்டி எடுத்து, அதனுடன் சில பொருட்களையும் வாசனைக்காக வறுத்து எடுப்பார்கள்.
கடைசியில் அதற்கென இருக்கும் ஒவ்வொரு டப்பாக்களில் அதனை போட்டு மாவு மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து, அதனை ஒருபேப்பரில் சூடு போக காய வைத்து அதே டப்பாக்களில் 6 மாதம் தாங்குவது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்வர்.

யாரும் செய்வதில்லை
இதனை தன் மகன், மகள்களுக்கு பிரித்து தரும்போது பெற்ற தாயின் மன சந்தோஷம் யாராலும் உணர முடியாது. அம்மா கொடுத்த அந்த மிளகாய்தூள் வாசனையுடன் சேர்த்து பாசமும் ஆறு மாசத்துக்கு தாங்கும். நவீன உலகில் இதை இப்போது பெரும்பாலும் செய்வதில்லை.

தூங்கி விட்டார்
ஆனால் ஒரு தாய், சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் மிளகாய், மல்லி, மஞ்சள் போன்றவற்றை காயவைத்து அதற்கு பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்தார். உச்சி வெயில் மண்டையை பிளக்க களைப்பான அவர் பேப்பர் ஒன்றினை தரையில் விரித்து கொஞ்ச நேரத்தில் அப்படியே படுத்து தூங்கியும் விட்டார்.

விதிமுறைகள்
இதை போட்டோ எடுத்து, தனா டெல்டாகாரன் என்பவர் தனது பேஸ்புக்கில் போட்டு தன் கருத்தையும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

தாய் அன்பு
பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. தாய் அன்புக்கு ஏது இணை? அம்மான்னா அம்மாதான்!!

மனது கஷ்டப்பட்டது
அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications