Viral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்
மாடு ஒன்று இளைஞர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: வெறும் 2 நிமிஷ வீடியோதான் இது.. ஆனால் எட்டி எட்டி உதைத்து ஆக்ரோஷத்தை களிமண் கிரவுண்டில் வெளிப்படுத்துகிறான் நம்ம பசுநேசன்!
கோவாவில் ஒரு விளையாட்டு மைதானத்தில் சில இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது பந்து அங்கு நின்றிருந்த ஒரு மாட்டின் அருகே சென்றுவிடுகிறது. அதனை எடுப்பதற்கு, விளையாடிக்கொண்டிருந்த ஒருவர் அந்த மாட்டின் அருகில் செல்கிறார்.

ஆக்ரோஷம்
ஆனால் மாடு அவரை நெருங்கவிடவில்லை. பதிலுக்கு ஆக்ரோஷத்தை காட்டுகிறது. பிறகு அந்த பந்தை கால்களால் எட்டி உதைக்கிறது. அப்படியே உதைத்து கொண்டே தன் பக்கமாக பந்தை எடுத்து கொள்கிறது. ஆனாலும் அந்த நபர் பந்தை விடுவதாக இல்லை. மாடு பின்னாடியே போகிறார். அந்த மாடு இவருக்கு மேல் உள்ளது. பந்தை தர எண்ணமே இல்லாததுபோல உதைத்து கொண்டே செல்கிறது.

உதைக்கிறது
பிறகு அந்த இளைஞரை நோக்கி மாடு வருகிறது. அந்த சமயத்தில் வேறு ஒரு இளைஞர் அந்த பந்தை எடுக்க வருகிறார். ஆனால் இதை பார்த்துவிட்ட மாடு, திரும்பி வந்து பந்தை உதைத்து தன் பக்கம் வைத்து கொள்ள பார்க்கிறது.
|
வீடியோ வைரல்
இப்படியே ஒரு பந்துக்காக விரட்டி விரட்டி எட்டி உதைத்து கொள்வது தொடர்கிறது. கடைசியில் அந்த இளைஞர்கள் விளையாடினார்களா, அந்த மாடு விளையாட விட்டதா என்றுகூட நமக்கு தெரியவில்லை. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். யாரையுமே விளையாடவும் விடாமல், நெருங்கவும் விடாமல் இந்த மாடு செய்யும் சேட்டை பொதுமக்களை கவர்ந்து வருகிறது.

சோகம்
ஆனால் இந்த மாட்டின் பின்னணியில் ஒரு பெரும் சோகம் இருக்கிறது. தாய்மையின் பெருமையை இந்த பசு மாடு தனது மெளனத்தால் வெளிப்படுத்தியுள்ளது. இந்த பசுவின் கன்றுக்குட்டி சிலநாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டது. அது முதல் சோகமாக இருந்த இந்த பசு மாடு எதேச்சையாக மைதானத்திற்கு வந்துள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்த பந்தைப் பார்த்ததும் அதன் நெஞ்சில் ஈரம் சுரந்து தனது கன்றுக் குட்டி என்று நினைத்து ஓடி வந்து பந்தை பாதுகாக்க ஆரம்பித்து விட்டது.

தாய்மை
அதை எடுக்க முனைந்த இளைஞர்களை எடுக்க விடாமல் தடுத்தது. பசுவுக்கு அந்த பந்து கன்றுக்குட்டி போலத்தான் தெரிந்தது.. நமக்குத்தான் அது ஏதோ விளையாடுகிறது போல என்று நினைத்து விட்டோம்.. தாய்மையின் உயர்வுக்கு இதை விட சிறந்த உதாரணம் எங்காவது காட்ட முடியுமா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications