நீ யாருய்யா.. பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ண.. ஹெல்மெட் போடாமல் எஸ்ஐயுடன் வெட்டி வாதம்.. வைரல் வீடியோ
ஹெல்மட் அணியாமல் டிராபிக் போலீசாருடன் நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார்
Recommended Video
சென்னை: "நீ யாருய்யா.. பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கே.. யார் வேணும்னாலும் வரட்டும்..வாங்கய்யா.. நீங்க எத்தனை பேரு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது
இன்று காலை அண்ணாநகர் ரோடு வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. சிக்னலில் நான்கைந்து போலீசார்கள் போக்குவரத்தை சீர் படுத்தி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான், ஒரு நபர் பைக்கில் வந்தார். பின்னாடி ஒரு பெண் உட்கார்ந்திருந்தார்.

சிக்னலில் பைக் நின்றதும், போக்குவரத்து உதவி ஆய்வாளர் அவர் அருகில் வந்து ஏன் ஹெல்மட் போடலைன்னு கேட்கவும் வாய்த் தகராறு முற்றுகிறது. அந்த வீடியோ விவரம்தான் இது:
போலீஸ்: ஏன் ஹெல்மட் போடலை
நபர்: "நீ யாருய்யா.. பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கே.. யார் வேணும்னாலும் வரட்டும்.. வாங்கய்யா.. நீங்க எத்தனை பேரு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது"
போலீஸ்: "மத்தவங்க எல்லாம் எப்படி போறாங்க? யாரையாவது நாங்க டிஸ்டர்ப் பண்றோமா? வண்டியை ஓரங்கட்டு"
நபர்: முடியாதுய்யா.. நீ என்ன பண்றேன்னு பார்க்கறேன்.. என்னை அடிக்க போறியா, என்ன பண்ண போறே? நான் இப்படித்தான் நிப்பேன். நீ 10 மணி வரைக்கும் நில்லு, உன் டியூட்டி முடியிற வரைக்கும் நில்லு. பார்ப்போம். நீ யாரு என் வண்டியை ஓரங்கட்ட சொல்ல?

போலீஸ்: "வேற யார் சொன்னா ஓரங்கட்டுவே?"
நபர்: "யார் சொன்னாலும் நான் வர முடியாதுய்யா.."
போலீஸ்: "ஆமா.. ஏன் என்னை வாய்யா, போய்யான்னு சொல்றே"
நபர்: "நீ மட்டும் என்னை வாய்யா, போய்யான்னு சொல்றே? நீ யாரு முதல்ல?"
போலீஸ்: என்னை பார்த்தா யாருன்னு தெரியலையா?
நபர்: "நீ யாரு பிரைம் மினிஸ்டரா? நீ யாரோ? கூத்தாடி மாதிரி சுத்திட்டு இருக்கே. பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கே.
போலீஸ்: என்னது கூத்தாடியா? யார் கூத்தாடி? வண்டியை ஓரங்கட்டு
நபர்: முடியாது.. நான் இங்கதான் நிப்பேன்.
போலீஸ்: ரோட்டுல எவ்ளோ நேரம் நிப்பே?
நபர்: நான் வரி கட்றேன். இப்படித்தான் நிப்பேன். எவ்ளோ நேரம் வேணும்னாலும் இங்கேயே நிப்பேன்
போலீஸ்: சரி கேஸை புக் பண்ணிக்கறோம். கோர்ட்டுல போய் பதில் சொல்லிக்கோ. ஓரமா நிக்கிறதுல என்ன கஷ்டம்? போற வர்றங்களுக்கு வழி வேணாமா?
நபர்: நீங்க ஏன் என்னை நிப்பாட்டினீங்க? நீங்க எல்லாரும் என்னை இங்கேதானே நிக்க சொன்னீங்க? நீங்க நடுரோட்டுல நிக்கும்போது, நான் மட்டும் ஏன் நிக்க கூடாது? என்னை ஏன் ஓரமா வர சொல்றீக? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
போலீஸ்: ஏன் ஹெல்மட் போடல?
நபர்: அதெல்லாம் போட முடியாதுங்க.. அதைதான் ஆரம்பத்தில இருந்தே சொல்லிட்டு இருக்கேன். என் வேலையை கெடுத்து ஏன் நிக்க வெச்சீங்க? இந்த வண்டியை தூக்கி ஓரமா வெக்கணுமா? வெச்சுக்கோ.. ஆனா நான் இங்கதான் நிப்பேன்" இப்படியே உச்சிவெயிலில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு விரைந்து வந்த ஒருபோலீஸ் அதிகாரி, "உன் அப்பன் வீட்டு ரோடுன்னு நினைச்சியா? பப்ளிக்குக்கு நியூசன்ஸ் பண்ணிட்டு இருக்கே" என்று கண்டிக்கிறார். "வண்டி டீடெயில்ஸ், எடுத்துக்கிட்டு, பூட்டி சாவியையும் எடுத்துட்டு வாங்க" என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்புகிறார்.












Click it and Unblock the Notifications