பரவும் வைரஸ் காய்ச்சல்..மிரட்டும் வெப்ப அலை..தமிழகத்தில் 1-9 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இன்புளுயன்சா என்3எச்2 வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலும் பரவி வருவதால் பொது இடங்களில் நடமாடுபவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வாகனம் ஓட்டுவது சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 100.5, நாமக்கல்லில் 100.4 என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் தொடங்கி விட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020,2021ஆம் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களுக்கும் இறுதித்தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் போடப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்கள் ஜூன் முதல் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications