பாஜக பொங்கினது போங்கா?பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் போர்ஜரி என அம்பலம்!
சென்னை: பரத நாட்டிய கலைஞரும் அரசு இசைப் பள்ளியின் கலையியல் அறிவுரைஞருமான ஜாகீர் உசேன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் மோசடியானது; புனையப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில்தான் ஜாகீர் உசேன் மீதான புகார் புனையப்பட்டது என அம்பலமாகி இருக்கிறது.
Recommended Video

பாலியல் புகார்
தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர், பரத நாட்டியக் கலைஞரான ஜகீர் உசேன். தமிழகத்தின் இசை பள்ளிகளில் ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்தார்; அத்துமீறி நடந்து கொண்டார் என அடுத்தடுத்து ஆசிரியைகளிடம் இருந்து புகார்கள் வந்தன.

ஜாகீர் உசேன் மீதான புகார்?
இது தொடர்பாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குநருக்கு கரூர் ஆசிரியை அனுப்பிய புகார் கடிதம் ஒன்றில், கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படி நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது என கூறியிருந்தார். இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் ஜாகீர் உசேன் மீது புகார் எழுந்தது.

பாஜக தலைவர்கள் கொதிப்பு
இதனையடுத்து ஜாகீர் உசேன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அடுத்த 24 மணிநேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கொதித்துப் பேட்டி கொடுத்தனர். ஜாகீர் உசேனை மனித மிருகம் என்றெல்லாம் கூட எச்.ராஜா விமர்சித்திருந்தார். அத்துடன் ஶ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜாகீர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போர்ஜரி புகார்கள்
இஸ்லாமியராக இருந்தாலும் இந்து கடவுள்களை வணங்குவதிலும் பரத நாட்டியத்தை வளர்ப்பதிலும் முனைப்புடன் திகழ்ந்தவர் ஜாகீர் உசேன். இஸ்லாமியர் என்பதற்காகவே கடுமையான விமர்சனங்களுக்குள்ளான ஜாகீர் உசேனுக்கு திமுக அரசுதான் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர் பதவியும் கொடுத்தது. இந்நிலையில் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் குறித்து பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரித்தது. இந்த விசாரணையில் ஜாகீர் உசேன் மீதான புகார்கள் அனைத்தும் மோசடியானவை; புனையப்பட்டவை என்பது அம்பலமாகி இருக்கிறது. இதனால் ஜாகீர் உசேன் விவகாரத்தில் பரபரப்பு தற்போது அடங்கி உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது












Click it and Unblock the Notifications