தேசிய கொடி கம்பீரமா பறக்குது! ஆனா எங்க கேப்டன்! விஜயகாந்தைப் பார்த்து கண்கலங்கிய தேமுதிக தொண்டர்கள்!
சென்னை : சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நிலையைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது விரல் அகற்றப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை
மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது நல்ல நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.

பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொது வெளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்றார் அது இன்றுதான். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.

உற்சாகம்
பல நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் விஜயகாந்த் வீட்டிலேயே இருந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்ததோடு வெற்றி குறி காட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த பல தொண்டர்கள் திரைப்படங்களை வில்லனை மாறி மாறி பந்தாடி பக்கம் பக்கமாக வீர வசனம் பேசிய எங்கள் கேப்டனா இது என கண்ணீர் விட்டனர்.

கண்ணீர் விட்ட தொண்டர்கள்
ஒரு தொண்டர் விஜயகாந்தை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீரத்தோடு வருவார் எனவும் தொண்டர்கள் வேண்டிக் கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications