டாஸ்மாக்கை மூடணுமா? 2016-ல் கருணாநிதி சொல்லியும் யாருக்கு ஓட்டு போட்டீங்க.. அமைச்சர் உதயநிதி கேள்வி
சென்னை: மதுராந்தகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அங்கு நின்ற மக்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது மதுக்கடைகள் மூடப்படும் என்று திமுக 2016-ல் வாக்குறுதி அளித்த போதும் அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுக்களால், விறு விறுப்புக்கு பஞ்சம் இன்றி தேர்தல் பிரசாரம் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக திமுக - அதிமுக இடையே வார்த்தை மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் செங்கல்லை காட்டி பிரசாரம் மேற்கொண்ட போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, ஸ்கிரிப்டை மாற்றுங்க என்று பதில் விமர்சனம் வைத்தார். இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து ஸ்கிரிப்டை மாற்ற சொல்கிறார்.. நானாவது கல்லைக் காட்டுகிறேன்.. ஆனால் நீங்க (எடப்பாடி) பல்லைக் காட்டுகிறீர்கள்.. என்று கூறினார்.
மோடியுடன் எடப்பாடி சிரித்தபடி நிற்கும் போட்டோவையும் பிரசாரத்தில் உதயநிதி எடுத்துக்காட்டினார். இதற்கு பதிலடியாக தனது கையில் ஒரு போட்டோவுடன் வந்த எடப்பாடி பழனிசாமி, நான் பல்லைக் காட்டுகிறேன் என்றால் நீங்கள் என்ன காட்டுகிறீர்கள்? என்று கூறி பிரதமர் மோடியுடன் முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.
இவ்வாறாக தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் பாஜகவும் தனது பங்குக்கு அதிமுக, திமுகவை ஒரு சேர கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக போட்டியிலேயே இல்லை என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். இவ்வாறாக தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கி விட்டது.
இந்த நிலையில், இன்று மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2016-ஆம் ஆண்டு மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி வாக்களித்த போது நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டு இருந்த போது, கூட்டத்தில் இருந்தபொதுமக்கள் ஒயின்ஷாப் மூட வேண்டும் என்று சொல்லி வந்தனர்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "டாஸ்மாக் மூட வேண்டுமா? 2016-ல் கருணாநிதி ஆட்சிக்க்கு தேர்ந்தெடுக்க எல்லா ஒயின்ஷாப்பையும் மூடிவிடுகிறேன் என்று சொன்னார்... ஓட்டு போட்டீங்களா.. 2016- தேர்தலின் போது கருணாநிதி வாக்குறுதி கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததது என்றால் எல்லா ஒயின்ஷாப்பையும் மூடி விடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஓட்டு போட்டீங்களா.. யாருக்கு ஓட்டு போட்டீங்க.. அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீங்க.. என்று சிரித்தபடியே கூறினார்.
2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதிமுக ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதியை கூறினார். அந்த தேர்தலில், பூரண மதுவிலக்கு என்ற கோஷம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிரதானமாக வைக்கப்பட்டது. எனினும் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications