ஸ்டாலின் சுட்டு விரலை நீட்டினால்.. உணர்ச்சிபூர்வமாக பேசிய விபி கலைராஜனுக்கு திமுக அளித்த பரிசு
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்த விபி கலைராஜன் திமுக இலக்கிய அணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த விபி கலைராஜன், டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்த போது அமமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி பி கலை ராஜன் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த மார்ச் மாதம் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கலைராஜன் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக விபி கலைராஜன் கடந்த மார்ச் 21ம் தேதி இணைத்துக்கொண்டார்.

அப்போது பேசிய விபி கலைராஜன் திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தகுதியுடைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் தலைமை சரியானது என்பதால் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக சட்டதிட்ட விதி :31 பிரிவு:10 அ-ன்படி கழக இலக்கிய அணி இணைச்செயலாளராக விபி கலைராஜன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார் என உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் அமமுகவில் இருந்து விலகிய பின் திமுகவில் இணைந்த தங்கதமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு திமுகவில் வழங்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications