100 நாள் வேலை.. ஊதியம் ரூ.294 ஆக உயர்வு.. ஏப்ரல் 2 முதல் அமல்.. அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!
சென்னை : 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏபரல் 2-ஆம் தேதி முதல் ரூ.294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

100 நாள் வேலை
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது . இந்நிலையில், 2023-2024 ஆண்டுக்கான ஊதிய உயர்வு அரசாணையை மத்திய ஊரக மேம்பட்டு அமைச்சகம் வெளியிட்டது.

ஏப்ரல் 2 முதல்
அதன்படி தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலித் தொகை ரூ.281-ல் இருந்து ரூ 294 ஆக உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ஊதியம் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இனி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பணிகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியம் உயர்வு
மேலும், சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.5,000ஆக உயர்த்தி வழங்க ரூ.112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு செய்யப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

முருங்கைக் கன்றுகள்
ஊரகப் பகுதிகளில் ரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும். 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.137 கோடியில் 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஊரகப் பகுதிகளில் ரூ. 1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ. 1,500 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சாலைகள், கால்வாய்கள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தரப்படும். ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ.70 கோடியில் கட்டப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

புதிய சத்துணவுக் கூடங்கள்
நமக்கு நாமே திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படுகிறது. மலைப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் 1,500 கி.மீ. ஊரகச் சாலைகள் அமைக்க 500 மெ.டன் நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications