டெல்லியில் என்ன நடந்தாலும்.. "இது நடந்தே தீரும்".. சசிகலா சொன்னதும்! சீட்டில் இருந்து எழுந்த தலைகள்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது சசிகலா நடத்திய மீட்டிங் ஒன்று அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மீட்டிங்கில் பேசப்பட்ட சில விஷயங்கள் கட்சிக்குள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 17. இந்த வருடம் அதன் பொன்விழா தொடங்கும் வருடம். இதனை அதிமுகவினர் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி சார்பில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இதனை மிகச் சிறப்பாக கொண்டாட சசிகலாவும் திட்டமிட்டுள்ளார் .

சசிகலா பிளான்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை பிறந்ததும் அதிமுக என் கைக்கு வரும் என தனது ஆதரவாளர்களிடம் அழுத்தமாக சொல்வதை தொடர்ச்சியாக செய்து வருகிறார் சசிகலா. இந்த நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்துவது குறித்து, தனது ஆதரவாளர்கள் பலரையும் நேற்று தனது சென்னை இல்லத்திற்கு அழைத்திருந்தார் சசிகலா. சுமார் 2 மணி நேரம் நேற்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். சிற்றுண்டியுடன் இந்த ஆலோசனை நீண்டு உள்ளது.

நம்பிக்கை பேச்சு
அப்போது வழக்கம் போல் நம்பிக்கை விதைகளை அவர்களிடம் விதைத்த சசிகலா, கோர்ட்டில் எது நடந்தாலும் அதெல்லாம் நன்மைக்கே என நினையுங்கள். கட்சி நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். அன்றைக்கு எல்லோரும் என் பின்னால் வருவார்கள். என்னை எதிர்ப்பவர்கள் கூட என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை ஆதரிக்க முன்வருவார்கள். இது நடந்தே தீரும். பார்த்துக்கொண்டே இருங்கள்.

சசிகலா பேச்சு
நீங்கள் நம்பிக்கையுடன் அரசியல் பணிகளை முன்பை விட கூடுதலாக தொடர வேண்டும். அதற்கு அக்டோபர் 17-ந் தேதியை குறி வைத்துக் கொள்ளுங்கள். அன்றையிலிருந்து உங்கள் பணி சீரியசாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். சசிகலா இப்படி நம்பிக்கையாக பேசுவதை கேட்டதும் அங்கு இருந்த தலைவர்கள் பலர் வியப்பாக.. என்ன இவர் இவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறார். என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்
சிலர் சீட்டில் இருந்து எழுந்து.. சசிகலா பேசுவதை ஆர்வமாக கேட்டுள்ளனர். முன்பை விட கூடுதல் நம்பிக்கையாக அவர் பேசி இருக்கிறாராம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓரிருவரை தவிர எல்லோரும் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று உறுதியாக பேசியிருக்கிறார் சசிகலா. இந்த நிலையில், அக்டோபர் 17-ந் தேதி எம்ஜிஆர் இல்லமான ராமாபுரம் தோட்டத்துக்கு சென்று , அந்த வளாகத்தில் தன்னால் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார்.

என்ன பிளானிங்?
அதேபோல, எம்ஜிஆர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, எம்ஜிஆர்-ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்றும், அப்படியே அதிமுக தலைமையகத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாஜிக்கள் சிலரும் சசிகலாவை வலியுறுத்தியிருக்கிறார்கள். இதனையேற்று அதிமுக தலைமையகம் செல்வாரா என்கிற பரபரப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதற்கிடையே, அக்டோபர் 17-க்கு பிறகு சசிகலாவும் தமிழகத்தில் மீண்டும் டூர் அடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications