பிஎப் இல் பணம் எடுக்க வேண்டுமா? இதை எல்லாம் செஞ்சா, சிக்கல் இல்லாமல் பணம் கைக்கு வரும்!
சென்னை: பிஎப் இல் பணம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, அதற்கு epfo இணையதளத்தில் இதை எல்லாம் சரியாக செய்து இருந்தால் உங்களுக்கு சிக்கல் இல்லாமல் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும். பிஎப் கணக்கில் சிக்கல் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு ஏதேனும் ஒரு சிக்கல் வந்தால், அவர்கள் கைவைக்க விரும்பும் இடம் என்றால் அது பிஎப் பணம் தான். பொதுவாக பிஎப் கணக்கில் பணம் எடுக்க வேண்டாம் என்பது பலரது அறிவுரை.

ஹெச்ஆர்கள் பலர் கூறிய அறிவுரை என்ன வென்றால், பிஎப் பணத்தை எடுக்காமல் வயதான காலம் வரை வைத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய தொகை உங்கள் கணக்கில் இருக்கும். அதை வைத்து உங்கள் வயதான காலத்தை சிறப்பாக அனுபவிக்கலாம். அப்போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, உயர்கல்விக்கு பயன்படும் என்கிறார்கள்.
ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், கையில் எந்த சேமிப்பும் இல்லாத போது, கடைசியில் பிஎப் பணத்தை தான் எடுக்க வேண்டிய நிலைக்கு மாத சம்பளம் வாங்குவோர் ஆளாகிறார்கள். அவர்கள் பிஎப் அட்வான்ஸ் முறையில் பணம் எடுக்கலாம்.
உங்கள் கணக்கில் உள்ள தொகையில் பாதியை பிஎப் அட்வான்ஸ் முறையில் உயர்கல்வி, உடல்நிலை பாதிப்பு போன்ற காரணத்திற்காக எடுக்கலாம்.
epfo இணையதளத்தில் பணம் எடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் https://www.epfindia.gov.in/ இணையதளத்திற்குள் செல்லுங்கள். அதில் சர்வீஸ் என்று இருக்கும் முதல் ஆப்சனில் எம்ப்ளாயி என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Member UAN/Online Service (OCS/OTCP) என்று ஆப்சன் கீழே காட்டும். அதனை கிளிக் செய்தால் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளம் ஓபன் ஆகும்.
அதில் உங்கள் யுஏஎண் நம்பர், அதற்கு கீழ் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் அதில் உள்ள கேப்சியாவை நிரப்ப வேண்டாம். பாஸ்வேர்டு மறந்துவிட்டால், பாஸ்வேர்டு மறந்துவிட்டதற்கான ஆப்சனை கிளிக் செய்து ரீசெட் செய்து ஓபன் செய்யலாம்.
லாகின் செய்து உள்ளே சென்ற உடன் அதில் கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் ஆன்லைன் சர்வீஸ் என்ற ஆப்சனில் ONLINE CLAIM (FORM 31,19,10C & 10D) என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்கும். அதனை செய்த பின்னர் என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். அதற்கும் ஆப்சன் காட்டும் . அதை முடித்துவிட்டு எவ்வளவு பணம் என்பதை குறிப்பிடுங்கள்.
உங்கள் கணக்கில் உள்ள பணத்தில் பாதியை பெற முடியும். அதற்கு மேல் போடாதீர்கள். அதன்பிறகு நீங்கள் கொடுத்த வங்கி கணக்கு எண்ணின் செக் லீப் ஒன்றினை பென்சிலால் ஒரு முறை அடித்து,. அதனை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்யுங்கள். இறுதியாக உங்கள் முகவரியை டைப் செய்யுங்கள். அதன்பிறகு உங்கள் ஆதாரை ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அந்த ஒடிபியை டைப் செய்து சப்மிட் கொடுங்கள். இப்போது உங்கள் கோரிக்கை பிராசஸில் உள்ளதாக குறிப்பிடுவார்கள். உங்கள் கோரிக்கை 15 முதல் 20 நாட்களில் நிறைவேறி பணம் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும்.
அதேநேரம் பிஎப் கணக்கில் பணம் எடுக்கும் முன்பு செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. நீங்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளீர்கள் என்றால், அந்த கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் தற்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள். அப்படி செய்தால் மட்டுமே பணம்கிடைக்கும். மாறாக வேறுவேறு கணக்கில் பணம் இருந்தால் கிடைக்காது. அதேபோல் ஏற்கனவே நீங்கள் பணியாற்றிய நிறுவனம், நீங்கள்வேலையை விட்டு அந்த நிறுவனத்தில் நின்ற தேதியை குறிப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அதையும் செய்ய வையுங்கள். இதெல்லாம் சரியாக இருந்தால் பிஎப் அட்வான்ஸ் பணம் உங்கள் கைக்கு 15 நாட்களில் கிடைக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications