Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்வளவு நம்பிக்கையா போனாரே! சுழலில் சிக்கிய ஓபிஎஸ்! பாஜக தந்த ட்விஸ்ட்! ஊசலாடும் அரசியல் எதிர்காலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் என்னும் "சுழலில்" ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட வசமாக சிக்கிக்கொண்டதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பாஜகவின் ஒற்றை நிலைபாட்டில் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.

எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பாஜக எடுக்க போகும் முடிவுதான் மிகப்பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. பாஜக எடுக்க போகும் முடிவை வைத்துதான் ஓபிஎஸ் வாழ்வாரா? வீழ்வாரா? என்பது தெரிய வரும்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக இந்த முறை அதிமுகவே போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இன்று முதல் வரும் ஜனவரி 26 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் வேட்பாளர்

ஓபிஎஸ் வேட்பாளர்

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக மட்டும்தான் இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசியது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் காரணம்

ஓபிஎஸ் காரணம்

பாஜக தனக்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இப்படி குறிப்பிட்டு இருந்தார். அதாவது எடப்பாடி - ஓபிஎஸ் என்ற மோதல் வந்தால் பாஜக தனக்குத்தான் ஆதரவு கொடுக்கும். பாஜகவிற்கு நாம்தான் விசுவாசமாக இருக்கிறோம். தொடக்கத்தில் இருந்து அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம். அதனால் பாஜகதான் நமக்கு ஆதரவு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

 அண்ணாமலை நிலைப்பாடு

அண்ணாமலை நிலைப்பாடு

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக இன்னும் வேட்பாளரை நிறுத்தவில்லை. மாறாக அதிமுகதான் பெரிய கட்சி. கூட்டணி இருக்கும் பெரிய கட்சி அவர்கள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவிற்கு ஏற்கனவே ஈரோட்டில் இருந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பாக முடிவு எடுப்போம் என்று அண்ணாமலை சூசமாக தெரிவித்துள்ளார். அதாவது ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்போம் என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அவரின் இந்த பேச்சால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

 ஆதரவு யாருக்கு

ஆதரவு யாருக்கு

அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்ற பட்சத்தில் எடப்பாடி அணிக்கு கொடுக்குமா? ஓபிஎஸ் அணிக்கு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் டெல்லி சப்போர்ட் காரணமாக சின்னம் முடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடியும். ஆனால் அதே பாஜக எடப்பாடி அணிக்கு சப்போர்ட் செய்தால் சின்னம் எடப்பாடி அணிக்கு செல்ல அதிக சான்ஸ் உள்ளது. ஏனென்றால் எடப்பாடிக்குத்தான் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

சுழல்

சுழல்

இதனால் எடப்பாடி பக்கம் பாஜக செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி மட்டும் சென்றால் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சிக்கலை கொடுக்கும். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் என்னும் "சுழலில்" ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட வசமாக சிக்கிக்கொண்டதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பாஜகவின் ஒற்றை நிலைபாட்டில் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது. பாஜக மட்டும் எடப்பாடியை ஆதரிக்க முடிவு செய்துவிட்டால் அவரின் மொத்த அரசியல் எதிர்காலமும் சிக்கலுக்கு உள்ளாகும். இந்த தேர்தலில் பாஜகவும் போட்டியியிடும் என்று எதிர்பார்த்து நம்பிக்கையாக இருந்த ஓபிஎஸ் தற்போது பாஜகவின் நிலைப்பட்டால் சிக்கலில் மாட்டும் நிலைக்கு சென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+