பாத்ரூம் ஜன்னலில் ஓட்டை.. அப்படியே அப்பட்டமாய்.. மிட்நைட்டில் அலறிய பயணி.. நம்ம ரயில்வேயில்தான்..!!
காச்சிகோடா எக்ஸ்பிரஸ் கழிவறை ஜன்னலின்றி ஓபனாகவே இருந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது
சென்னை: ரயில்வே பாத்ரூம் ஜன்னல் ஓபனாகவே இருந்துள்ளது.. இதை பார்த்து பயணி ஒருவர் பதறிப்போய், அதை வீடியோவும் எடுத்து பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை கூட்டிவருகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல... உலக அளவில் ஊபர் உட்பட கால் டாக்ஸிகள் சேவை மீது அடிக்கடி புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன..இன்றைய துரித உலகில், சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இத்தகைய சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்..
அதேசமயம், எத்தனையோ சர்ச்சைகள் ஊபர் குறித்தும் வந்துகொண்டே இருக்கிறது. சாமான்ய மக்களைவிட, பிரபலங்கள் யாராவது, தாங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் குறித்து அடிக்கடி சோஷியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம்..

கால்டாக்ஸி
கால்டாக்ஸிகள் குறித்த புகார்கள் குவிவதுபோலவே, ரயில்வே குறித்த புகார்களும் சமீபகாலமாகவே அதிகரித்து வருகின்றன.. தாங்கள் பயணங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவலங்களையும்கூட சிலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அம்பலப்படுத்தி வருகிறார்கள்.. அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.. சென்னையைச் சேர்ந்தவர் ஷைலேஷ் காமத்... கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்... இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய மனைவியோடு சென்னை எக்மோரிலிருந்து ஹைதராபாத் நோக்கி காச்சிகோடா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.

ஜன்னல் + ஓபன்
அப்போது கூட்டி ரயில்வே ஸ்டேஷனில் கீழே இறங்கி பார்த்தபோது, அவர் பயணம் செய்த பெட்டியின் கழிவறையை பிளாட்பார்மிலிருந்து பார்க்கும்படி அந்த ஜன்னல் ஓபனாகவே இருந்துள்ளது.. வழக்கமாக இதுபோன்ற ரயில்தவே பாத்ரூம்களுக்கு உள்ளிருந்து எதுவும் தெரியாதபடி, கருப்பு கூலிங் பேப்பர்கள் ஒட்டியிருப்பார்கள்.. ஆனால், இதில் அப்படி எதுவுமே ஒட்டப்படாமல், ஒளிவு மறைவின்றி, கழிவறைக்குள் நடப்பதை பார்க்கும் விதமாக அந்த ஜன்னல் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன அந்த நபர், அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருப்பு கூலிங் பேப்பர்
இது குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "நானும் என் மனைவியும் காச்சிகுட்டா எக்ஸ்பிரஸில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு சென்றுக்கொண்டிருந்தோம்... மிட்நைட் 1 மணிக்கு ரயில் கூட்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்றது... எனக்கு தூக்கம் வரவில்லை என்பதால் வெளியே வந்து நின்றேன்.. அப்போதுதான் அந்த பெட்டியில் இருந்த பாத்ரூம், பிளாட்பார்மிலிருந்து பார்க்கும்படியாக கழிவறை ஜன்னல் இருந்தது தெரிந்தது.. நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதில் ஒட்டப்படும் கருப்பு கூலிங் பேப்பர் அகற்றப்பட்டிருந்தது.

பாத்ரூம் ஜன்னல்
உடனே இதுகுறித்து அங்கிருந்த டிடிஆரிடம் முறையிட்டேன்... ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவேயில்லை. ஆன்லைனில் புகார் சொல்லுமாறு சொல்லிவிட்டார்.. பிறகு என்னுடைய சொந்த ஊர் வந்து சேர்ந்த பிறகு, ஆன்லைனில் புகார் தந்தேன்.. 10 நாளாகியும் பதில் இல்லை.. எத்தனையோ பெண்கள், குழந்தைகள் உட்பட அந்த பாத்ரூமை பயன்படுத்தியிருப்பார்கள்.. எனக்கு இவ்வளவு அலட்சியமாக ரயில்வே நிர்வாகம் இருக்கிறதே என்று மனஉளைச்சலாகிவிட்டது.. அதற்கு பிறகு, செப்டம்பர் 30-ம் தேதியன்று நான் பயணம் செய்தபோது ரெக்கார்ட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன்.

கண்ணாடி ஜன்னல்
இப்படி ஒரு வீடியோவை பதிவிட்டதுமே, ரயில்வே நிர்வாகம் விழித்துக் கொண்டது.. தன் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு கடிதம் மெயில் மூலம் அனுப்பியது.. "அந்த கடிதத்தில் உங்கள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது... ஆனால், இதுவரை அந்த ஜன்னல் சரிசெய்யப்பட்டதா என்று தெரியவில்லை?" என்று ஷைலேஷ் கூறியுள்ளார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications