‘விடுதலை 2’ ட்ரெய்லரில் விஜய் தாக்கப்பட்டாரா? ஏன் அந்த வசனம்? நடிகர் கிஷோர் விளக்கம்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள 'விடுதலை 2' அடுத்த மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனம் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
'விடுதலை 2' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில சலசலப்புகளுடன் நடந்து முடிந்திருக்கிறது. விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் அவரது படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் உட்படப் பலரது பெயரை சொல்லாமல் தவிர்த்திருந்தார். அதை அங்கே இருந்த அவரது உதவியாளர்கள் சுட்டிக் காட்டினர். அதற்கு, 'டீம் என்று சொன்னாலே நாம் எல்லோரும் தானடா' என்று பதிலளித்துவிட்டு மைக்கை வைத்துவிட்டுப் போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

ஒரு படத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குநர்கள் தங்களின் பெயரை இயக்குநர் மேடையில் சொல்லமாட்டாரா? என ஒரு ஏக்கத்தில் இருப்பது சகஜம்தான். அவர்களின் பெயரை மேடையில் கேட்கும் போது எங்கோ ஊரில் உட்கார்ந்து கேட்கும் அவர்களின் உறவினர்கள் கொஞ்சம் நம்பிக்கை பெறக் கூடும். ஆகவே, அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் வைத்த கோரிக்கையை வெற்றிமாறன் நிறைவேற்றாமல் அதற்கு ஒரு பதிலைச் சொல்லிவிட்டுச் சென்று அமர்ந்தார்.
அது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொல்கிறார்கள். படத்தை இயக்கிவிட்டு வெறும் 'டீம்' என்று பெயர் போட்டுக் கொள்வாரா? இயக்குநர் என்று அவர் பெயரைப் போட்டுக் கொள்வதைப் போல மற்றவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிப்பதுதானே சரி என வாதிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 'விடுதலை2' படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள "தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள் மட்டுமே உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது" என்ற வசனத்தை வைத்து பலரும் விஜய்யை டார்கெட் செய்து வருகிறார்கள். இது அவரை குறிவைத்து எழுதப்பட்ட வசனம் என எடுத்துக் கொண்டு விவாதித்து வருகிறார்கள்.
இந்தச் சர்ச்சை பற்றி நடிகர் கிஷோர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது 'பாராசூட்' பட புரமோஷனுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்படி ஒரு பேட்டியில் கிஷோர் பேசும்போது, "அப்படிச் சொல்ல முடியாது. இந்தப் படத்தின் மொத்த கதையும் கம்யூனிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி தொடங்கியது? அவர்களின் லட்சியம் என்னவாக இருந்தது?
இன்றைக்கு சினிமா எடுப்பதன் மூலம் பணம் கிடைக்கிறது. நடிப்பதன் மூலம் பெயர் கிடைக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்காக எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் அவர்கள் உழைத்து இருக்கிறார்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்திருக்கிறார்கள். ஆகவே, அதை பேசுகின்றது இந்தப் படம்.

அப்படிப்பட்ட படத்தில் இப்படியான ஒரு வசனம் தானே இருக்கமுடியும். அவர்களின் உயிர்மூச்சே தத்துவம் தானே? வெற்றிமாறன் எப்போதும் என்னிடம், 'என் படங்களில் நடிப்பவர்கள் அனைவரும் சாதாரண நடிகர்கள். அந்த இடத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்தால், அது பொருந்துமா என எனக்குத் தெரியவில்லை' என்று சொல்வார். மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து வெற்றிமாறன் படம் பண்ணுகிறார். அங்கே ஹீரோயிஸத்திற்கு இடம் இருக்காது.
அந்தக் கதைதான் படத்தை பிரதானப்படுத்தும். அங்கே ஒரு பெரிய ஸ்டாரை வைத்தால், ஒத்து வராது. அவரது ரசிகர்கள் வேறு சில விசயங்களைப் படத்தில் எதிர்பார்ப்பார்கள். அதனால் பெரிய நடிகர்களே விடுதலை மாதிரியான படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிடுவார்கள்.
வெற்றிமாறனுக்கு என்று ஒரு ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அதை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே வருகிறார்கள். வெற்றிமாறன் என்ன சொன்னாலும் அதை உட்கார்ந்து பொறுமையாகக் கேட்பார்கள். அப்படி ஒரு விசயத்தைக் கமல் செய்தார். அவர் படத்தைப் பார்க்க வரும்போதே இதில் ஏதோ ஒன்றை புதியதாகச் செய்திருப்பார் என்று நம்பியே வந்து படம் பார்ப்பார்கள்.
அதைப்போல்தான் வெற்றிமாறன். அவர் கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு வசனத்தை வைத்துள்ளார். அது மற்றவர்களைக் குறிவைத்து எழுதப்படுவது அல்ல. இயல்பாக வரும் வசனங்கள்தான்" எனக் கூறியுள்ளார்.
-
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்! -
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
எங்கே போனார் விஜய்.. தவெக 2 ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணலிலும் ஆப்சென்ட் -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
காலை முதல் நோன்பு கடைபிடித்த விஜய்.. குல்லா அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு! -
தேர்தல் நெருங்கும் நேரம், விஜய்யின் மாஸ்டர் பிளான்.. “வீடியோ” வரப்போகுதாமே! பல கேள்விகளுக்கான விடை -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
நடிப்புக்கு டாட்டா சொன்ன விஜய்.. மலையாளத்திற்கு மாற்ற துடிக்கும் நடிகை.. ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை -
பொண்டாட்டி இருக்க, திரிஷா தேவையா? தெலுங்கு ரவி தேஜா படத்தின் வசனத்தில் உள்குத்து! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications