சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாஷிங்மெஷின் இலவசம்; இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500: பெண்களை கவரும் அதிமுக தேர்தல் அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களின் வாக்குகளை குறிவைத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குல விளக்கு திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் வழங்கப்படும், பெண்களுக்கு வாசிங்மிஷின் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Washing machine free; Rs 1,500 per month for housewives: AIADMK election statement to attract women

தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுகவும் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் என்று கூறப்பட்டது. அதன்படி சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களை கவர்ந்திழுக்கும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குல விளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்ன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாசிங்மிஷின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2ஜிபி டேட்டா - அதிமுக தேர்தல் அறிக்கை! கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2ஜிபி டேட்டா - அதிமுக தேர்தல் அறிக்கை!

நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, 50 % கட்டணச் சலுகை வழங்கப்படும்.என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கும் சோலார் சமையல் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பெண்களின் வாக்குகளை குறி வைத்து அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

English summary
The AIADMK election manifesto has announced various schemes targeting women's votes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X