பெங்களூர், ஹைதராபாத்தில் பெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர்ஷ்டவசமாக சென்னை கற்ற பாடம்.. மாறிய காட்சிகள்
சென்னை: பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு பெருநகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் சென்னையை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.. இந்நிலையில் சென்னை பல பாடங்களை கற்றதால் நீர் மேலாண்மையில் உஷாராகி உள்ளது. இதுபற்றி நெட்டிசன்கள் கருத்து மற்றும் உண்மை நிலை பற்றி பார்ப்போம்.
இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாக பெங்களூர் திகழ்கிறது. இந்தியாவின் எல்லா ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது.. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால், பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

இப்போது தான் மார்ச் மாதமே தொடங்கி உள்ள நிலையில், அதற்குள்ளேயே பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது. போர்களில் தண்ணீர் வரவில்லை.. காவிரியிலும் தண்ணீர் இல்லாதால் பெங்களூர் நகரம் வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தண்ணீர் நெருக்கடி காரணமாக பள்ளிகள்-பயிற்சி மையங்கள் மூடப்படுகின்றன. ஆன்லைனில் வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெங்களூர் நகரைவிட புறநகர் பகுதிகளில் தான் மோசமான நிலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக பெங்களூரு தெற்கு, ராஜராஜேஸ்வரிநகர், யஷ்வந்தபுரா மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. வாடகை வீடுகளில் உள்ள பலர் தண்ணீர் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பெங்களூர் நகருக்கு காவிரி நீர் தான் முக்கியமான குடிநீர். குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் இந்த முறை கடுமையான சிக்கலை எதிர்கொள்கிறார்கள். தண்ணீர் லாரிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையில் பெங்களூர் இருக்கிறது. வழக்கமான நாட்களில் தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், கட்டணம் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை அதிகரித்துள்ளது..

பெங்களூர் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் தான் தண்ணீர் பற்றாக்குறையால் மிக கடுயைமாக பாதிக்கப்பட்டுள்ளன. போர் தண்ணீரை நம்பியும் மாநகராட்சி தண்ணீரையும் நம்பி வாழ்ந்த மக்கள்இரண்டு தண்ணீரும் இல்லாத நிலையில், தண்ணீர் லாரிகளில் தினமும் வரவழைத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூர் நகரை பொறுத்தவரை கே.ஆர்.எஸ். அணை தான் குடிநீர் ஆதாராம். ஆனால் கோடை காரணமாக அணையில் நீர் இருப்பு குறைந்துவிட்டதால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகி உள்ளது. பருவ மழை சரியாக பெங்களூரில் பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீரும் இந்த முறை கைவிட்டுள்ளது..
பெங்களூர் போலவே ஹைதராபாத்தும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. அங்கும் விரைவில் நெருக்கடியான நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் நகரம் கிருஷ்ணா நதி நீரையும், கோதாவரி நதி நீரையும் நம்பி உள்ளது. இந்த முறை பருவ மழை பொய்த்து போனதால அங்கும் பிரச்சனையாக உள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஹைதராபாத்தில் குடிநீர் தேவைக்காக தற்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீருடன் கூடுதலாக ளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா, கோதாவரி, மஞ்சீரா மற்றும் இரட்டை நீர்த்தேக்கங்களான ஒஸ்மான்சாகர் & ஹிமாயத்சாகர் ஆகியவை தான் ஹைதராபாத்தின் நீர் ஆதாராங்களாக உள்ளன. ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் நாகார்ஜுனா சாகரில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து விநியோகித்து வருகிறது. ஹைதராபாத், பெங்களூர் நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி உள்ள நிலையில், செனனை மட்டுமே தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பி உள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையின் எல்லா ஏரிகளுமே டிசம்பரில் நிறைந்துவிட்டன. நிலத்தடி நீர் மட்டமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அதனால் தப்பிவிட்டது சென்னை. சென்னைக்கு இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையே உள்ளது.
ஆனால் கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்ற நிலையை சென்னை எதிர்கொண்டது. சென்னையில் மயிலாப்பூர்,அடையாறு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. 6 மாதங்கள் மழையே பெய்யாத நிலையும் இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக கடுமையானது. இந்த பிரச்சனையை சமாளிக்க சென்னைக்கு பக்கத்தில் ஏராளமான குளங்கள், ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனால் ஜூன் வரும் போது எல்லாம் தண்ணீர் சுத்தமாக இல்லாத நிலை ஏற்பட்டது.
ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டிய அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அந்த பாடத்திற்கு பிறகு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு பல்வேறு புதிய குடிநீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையில் அதிக அளவில் செயல்படுத்தப்படுகிறது. மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலி என இரண்டு இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) கொள்திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையங்கள் ஏற்கனவே உள்ளன.
இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகின்றன.. இதனிடையே, ரூ.4,276.44 கோடி செலவில் தினமும் 40 கோடி லிட்டர்(400 மில்லியன் லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3வது புதிய குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். 42 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே சென்னை அப்டேட்ஸ் என்ற பெயரில் உள்ள நெட்டிசன், ஹைதராபாத் குடிநீர் தட்டுப்பாடு குறித் ட்வீட் பதிவினை டேக் செய்து வெளியிட்ட பதிவில், "பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு பெருநகரங்களில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் சென்னையை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.. ஆனால் அதிர்ஷ்டவசமாக சென்னை ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டது. அதனால் போடப்பட்ட திட்டங்களால் 2026 ஆம் ஆண்டிற்குள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் மட்டுமே தினமும் 700 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கிடைக்கும். இங்கு இந்த முறை நல்ல மழை பெய்திருக்கும். சென்னையில் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியள்ளது என சென்னை அப்டேட்ஸ் என்ற பெயரில் உள்ள நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications