Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது.. நிலங்களை கையகப்படுத்தி தான் ஆகணும்.. அமைச்சர் எ.வ.வேலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 8 வழி சாலை திட்டத்திற்கு நாங்கள் எதிரி கிடையாது, போக்குவரத்து அதிகம் ஆகி உள்ளதால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும், என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டம் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளதாக மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த 8 வழி சாலை சென்னையில் இருந்து சேலம் வரை போடப்படுகிறது. இதில் எதிர்புறத்தில் நான்கு வாகனமும், அதற்கு எதிர் புறத்தில் 4 வாகனமும் வரும் வகையில் மிகவும் பெரிய அளவில் சாலை போடப்பட உள்ளது. இந்த சாலைக்காக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. மொத்தம் 274 கிமீ தூரத்துக்கு சாலை போடப்பட உள்ளது.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

இதன் மூலம் சென்னைக்கு சேலத்தில் இருந்து மிக விரைவாக சென்று சேர முடியும். ஆனால் இந்த சாலை முழுக்க முழுக்க விவசாய நிலங்களிலும், சில குடியிருப்பு பகுதிகளிலும் போடப்பட உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது இந்த திட்டத்தை கடுமையாக கேள்வி எழுப்பியது. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினின் இதை கடுமையாக எதிர்த்தார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அப்போது சேலத்தில் திமுக இந்த திட்டத்திற்கு எதிராக போராடியது. 2018ல் இது பற்றி கருத்து தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன்! அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது! இனியாவது, மாற்றுவழி குறித்து சிந்திக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் கருத்து

ஸ்டாலின் கருத்து

இந்த நிலையில்தான் 8 வழி சாலை திட்டத்திற்கு திமுக எதிரி கிடையாது, போக்குவரத்து அதிகம் ஆகி உள்ளதால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும், என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், செய்திகளில்தான் மாற்றி மாற்றி போடுகிறார்கள். 8 வழி சாலையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றுதான் முதல்வர் சொன்னார். ஜீரோ ஹவரில் எதிர்கட்சித் தலைவராக அப்போது ஸ்டாலின் பேசியதும் இதுதான்.

சாலை

சாலை

நாங்களே இதற்கு முன் சாலை போட்டுள்ளோம், நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். இதற்கு முன் திமுக ஆட்சியிலேயே பல சாலைகள் போட்டு இருக்கிறோமே. சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். போக்குவரத்து அதிகம் ஆகி உள்ளதால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும். பல வாகனங்கள் செல்கின்றன. இதற்கு விரிவான சாலை தேவை.

எதிர்ப்பு

எதிர்ப்பு

நிலங்களை தேவை என்றால் எடுத்துதான் ஆக வேண்டும். நிலங்களை எடுக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. இதை அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தெளிவாக சொன்னார். சட்டசபை குறிப்பில் இது இருக்கிறது. நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை.

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்க்கிறார்கள். மக்கள் பிரச்னையை கேளுங்கள். அவர்களின் பிரச்சனைக்கு செவி மடுத்து அதை சரி செய்யுங்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று பின்னர் அதை நிறையவேற்றுங்கள். நிறைவேற்ற முடியவில்லை என்றால் மாற்று வழிகளை காணுங்கள். பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றுதான் கூறினோம். இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம்.

சாலை உச்ச நீதிமன்றம்

சாலை உச்ச நீதிமன்றம்

இந்த சாலையை போட்டுத்தான் ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது, இந்த சாலை போட வேண்டுமா என்று கொள்கை முடிவுதான் எடுக்க வேண்டும். 8 வழி சாலை என்பது அரசின் கொள்கை முடிவு. 8 வழி சாலை போட வேண்டும் என்று நான் தனிப்பட்ட வகையில் எங்கும் சொல்லவில்லை. அமைச்சராக நான் தனிப்பட்ட வகையில் என்று எங்கும் சொல்லவில்லை. இதில் கொள்கை முடிவே எடுக்க வேண்டும், என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+