சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EXCLUSIVE: "நாங்க" வருமான வரி கட்டுறோம்.. இலவசம் தர கூடாது.. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேட்டி!

Google Oneindia Tamil News

சென்னை; இலவச வாக்குறுதிகள் தொடர்பான விவாதம் நாடு முழுக்க எழுந்துள்ள நிலையில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் அது தொடர்பாக ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது.

இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இன்று வாதம் வைத்தது. அதே சமயம் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை பாஜகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த சென்னை 134 வது வார்ட் கவுன்சிலர் உமா ஆனந்தன் இலவசங்களை ஏன் வாக்குறுதிகளாக அளிக்க கூடாது என்று ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவரின் பேட்டி பின்வருமாறு..

 EXCLUSIVE: சீமான் ஒரு சங்கி.. திமுக தந்த இலவசங்களை மோடி காப்பி அடிக்கிறார்.. ராஜீவ் காந்தி பேட்டி! EXCLUSIVE: சீமான் ஒரு சங்கி.. திமுக தந்த இலவசங்களை மோடி காப்பி அடிக்கிறார்.. ராஜீவ் காந்தி பேட்டி!

 உமா ஆனந்தன் பேட்டி

உமா ஆனந்தன் பேட்டி


கேள்வி: இலவச திட்டங்களில் பாஜகவிற்கு என்னதான் பிரச்சனை?

பதில்: பாஜகவிற்கு பிரச்சனை இல்லை. தேசத்திற்குத்தான் பிரச்சனை. வாழ்க்கையில் எல்லாம் இலவசமாக வந்தால் பிரச்சனைதான். திமுக வாக்குறுதியில் வீடு கட்ட இலவசமாக நிலம் கொடுப்போம் என்றால். இப்போது மத்திய அரசும் அதை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது எல்லாம் எவ்வளவு அரசாங்கத்தை பாதிக்கும். டிவி கொடுப்பது, சைக்கிள் கொடுப்பது எல்லாம் ஆடம்பரம்.

கேள்வி: டிவி 20 வருடங்களுக்கு முன் அத்தியாவசிய பொருளாக இருந்ததே? பலர் வீடுகளில் டிவி இல்லையே?

பதில்: நீங்க மனசை தொட்டு சொல்லுங்கள். அரசு தந்த டிவிக்கள் வேலை செய்த நிலையில் இருந்ததா?

டிவி தேவையா?

டிவி தேவையா?

கேள்வி: 2006ல் கொடுத்த டிவிக்கள் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்.

பதில்: பல இடங்களில் டிவி வேலை பார்க்கவில்லை என்று செய்தி வந்ததே அதையும் பாருங்கள். அதை பற்றியும் பேசுங்கள். இப்போது எல்லோரின் கையில் போன் இருக்கிறதே. அவர்கள் எல்லோரும் எப்படி போன் வாங்கினார்கள். இலவசங்களில் எது அத்தியாவசிய தேவை என்று பார்க்க வேண்டும். இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக கீழ்த்தட்டு மக்களுக்கு வேறு விதமான பாதுகாப்புகளை கொடுக்க வேண்டும். சமூக ரீதியாக அவர்கள் அடையும் பாதிப்புகளை தடுக்க உதவி செய்ய வேண்டும். இலவசங்களில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை கொடுக்க கூடாது.

கேள்வி: எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லை என்று சொல்ல முடியும்?

அரிசி மத்திய அரசு கொடுக்கிறது. அதில் இவர்கள் ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். அது அத்தியாவசியம். டிவி அவசியம் இல்லை. லேப்டாப் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவசியம். சைக்கிள் ஒரு சிலருக்கு அவசியம். போக்குவரத்து வசதி இல்லாதவர்களுக்கு அவசியம். சிட்டியில் உள்ளவர்களுக்கு சைக்கிள் அவசியம் இல்லை. சிட்டியில் உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் பள்ளி இருக்கும். அவர்களுக்கு சைக்கிள் இருக்கும். தமிழ்நாட்டிடம் பெஸ்ட் போக்குவரத்து வசதி உள்ளது. அப்படி இருக்கும் போது சிட்டியில் உள்ளவர்களுக்கு சைக்கிள் ஏன் அவசியம்? இதை வேறுபடுத்தி பார்க்க கூடாதா? தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் முன்பே இவர்கள் எப்படி இலவசம் தருவோம் என்று திமுக வாக்குறுதி கொடுக்கிறார்கள்?

 பாஜக செய்தால் தப்பு இல்லையா?

பாஜக செய்தால் தப்பு இல்லையா?

கேள்வி: எல்லோரும் சொல்லும் வாக்குறுதி தானே.. பாஜகவும் சொல்வதும் தானே?

பதில்; யார் சொன்னாலும் தப்புதான். ஓட்டு வாங்க யார் சொன்னாலும் தப்புதான்.

கேள்வி: 2014ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40க்கு கொண்டு வருவோம் என்று சொன்னதும் ஏமாற்று வேலை தானே?

பதில்: ஆனால் முயற்சி செய்தார்களே... நீங்கள் வேண்டுமானால் இல்லை என்று சொல்லலாம். ஆனால் வெளிநாட்டினர் எல்லாம் நாம் நல்ல எக்கனாமி என்று சொல்லி இருக்கிறார்கள். வெளிநாட்டினர் நம்மை பாராட்டி பேசுகிறார்கள். வெளிநாட்டில் இப்போது கிடைக்கும் மரியாதையை முன்பு கிடைத்து இருக்கிறதா? கொரோனா காலத்தில் கூட நாம் நன்றாகஇருந்தோமே?

கொரோனா பாராட்டுக்கள்

கொரோனா பாராட்டுக்கள்

கேள்வி: நெடுஞ்சாலையில் புலம்பெயர் தொழிலாளர் நடந்து சென்றார்களே? எங்கேயும் நடக்கவில்லையா?

நீங்கள் மாலைக்கண்ணோடு பார்க்கிறீர்கள். சில இடங்களில் நடந்தார்கள். நீலகிரியில் இப்போது கூட மலைப்பகுதியில் சாலை வசதிகள் இல்லையே. அதை பற்றி பேசுகிறீர்களா? இலவசத்தில் முன்னோடி தமிழ்நாடுதான். தமிழ்நாடு எப்போதுமே முன்னேறிய மாநிலம்தான். இலவசம் காரணமாக முன்னேறவில்லை. ஆர். வெங்கட்ராமன் காலத்திலேயே நாம் முன்னேறிவிட்டோம். கல்வியில் நாம் முன்னேறிவிட்டோம்.

மதிய உணவு திட்டம்

கேள்வி: மதிய உணவு இலவசம் தானே? அதை எதிர்க்கவில்லையா?

அது தேவை. எது தேவை இல்லை என்று நாம் முடிவு செய்ய வேண்டும். வரி கொடுப்பவர்கள் பணம் இதில் இருக்கிறது.

கேள்வி; பொது மக்கள் வரி கொடுக்கவில்லையா?

நான் சொல்வது வருமான வரி. அதை பற்றி மட்டும்தான் பேசுகிறேன். அந்த வரியை நன்றாக செலவு செய்யுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன்.

உமா ஆனந்தனின் முழு பேட்டியை பார்க்க மேலே உள்ள வீடியோவில் பார்க்கவும்!

English summary
We are paying income tax, Use it wisely says BJP Uma Anand on freebies case இலவச வாக்குறுதிகள் தொடர்பான விவாதம் நாடு முழுக்க எழுந்துள்ள நிலையில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் அது தொடர்பாக ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X