’இறைவனின் தீர்ப்பு’ பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.. ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப் டைமிங் ட்வீட்!
சென்னை: இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் தனத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதியன்று நிறைவடைந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது.

ஓபிஎஸ் வாதம்
அதேபோல் மார்ச் 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து ஓபிஎஸை நீக்கியுள்ளனர்.

பொதுச்செயலாளர் தேர்தல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அத்துமீறி நடந்திருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

தீர்ப்பு எப்போது?
அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாளை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் மகன் ட்வீட்
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து,
சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே...

இறைவனின் தீர்ப்புக்காக
தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.. கடை கோடி உண்மை தொண்டன் என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications