கிளாம்பாக்கம்.. பிரச்சினையை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்.. சட்டசபையில் முதல்வர் முற்றுப்புள்ளி
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடர்பான பெரும் பெரும் பிரச்னைகளை தீர்த்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் இருந்த பிரச்னைகளை சரிசெய்த பிறகுதான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் சர்ச்சை தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏ செல்லூர் ராஜுவின் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் பதில் அளித்து பேசினர். கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில்தான் திட்டமிடப்பட்டது என்றும் கூறினார் அமைச்சர் சிவசங்கர்,

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கிளாம்பாக்கத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை தீர்க்க தான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்த பிறகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருக்க வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை; பெரிய பிரச்சனைகள் இருந்தன.
அவையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். பிரச்சனைகளை தீர்த்து வைத்து பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம். நேரில் அழைத்து செல்கிறோம் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூறுங்கள், எங்கள் அமைச்சர்கள் அதனையும் தீர்த்து வைப்பார்கள். இத்தோடு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications